ரூ.5,800 கோடி மதிப்புள்ள வந்தே பாரத் ரயில் சேவை - எனக்காக தள்ளிப்போடக்கூடாது என கெத்தாக வந்த பிரதமர்!
இன்று தாயார் இறந்த தூக்கம் ஒரு புறம் இருந்தாலும் திட்டமிட்டபடி அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார், பிரதமர் மோடி.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மரணம் அடைந்ததால் இதை அடுத்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பாரா? அல்லது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுமா? என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் தற்பொழுது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொளி காட்சி வாயிலாக ரூபாய் 5,800 கோடி மதிப்பு நிறைவுற்ற பல்வேறு ரயில் திட்டப் பணிகளை இன்று நாட்டிற்கு அர்ப்பணித்து இருக்கிறார். ஆனால் நேரில் கலந்து கொண்டதாக அறிவிப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படாமல் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது தாயாரின் இறுதி சடங்குகளில் முடித்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்றார். குஜராத்தில் இருந்த அவர் காணொளி காட்சி மூலம் மேற்கு வங்காளத்தின் முதல் முறையாக இயக்கப்படும் ஜவுரா நியூ ஜல்பை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் சுமார் 560 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி நேரம் 45 நிமிடங்களில் கடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மூன்று மணி நேரம் பயண நேரம் மிச்சமாகும். மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி அவர்கள் நான் நேரடியாக வந்து விழாவில் கலந்து கொள்ள இருந்தேன்.
ஆனால் என் தாயார் மறைவு காரணமாக நேரில் வர முடியவில்லை. அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார். பிறகு இந்த திட்ட பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்து இருந்தார். இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரகாண்ட், ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தாயார் இறந்த தூக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் திட்டமிட்டபடி அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் இன்று பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Maalaimalar