உக்ரைன்- ரஷ்யா போர்... முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்திய பிரதமர் மோடி..

போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கும்.

Update: 2023-05-22 02:55 GMT

ஹிரோஷிமாவில் ஜி-7 உச்சி மாநாட்டின்போது 2023 மே 20-ம் தேதியன்று பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் விலாடிமிர் செலென்ஸ்கியைச் சந்தித்தார். உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோதல் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் அவரிடம் குறிப்பிட்டார். இரண்டு நாட்டு பிரதமர்களும் பேசிக்கொண்டு இருந்தார்கள். உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருக்கிறார் மற்றும் வலியுறுத்து இருக்கிறார்.


எவ்வாறாயினும், தன்னைப் பொறுத்த வரை இது அரசியல் பிரச்சனையோ, பொருளாதார பிரச்சினையோ அல்ல எனவும், மாறாக மனிதநேயம், மனித விழுமியங்கள் பற்றிய பிரச்சினை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.


இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதில் உக்ரைனின் ஒத்துழைப்பைப் பாராட்டிய பிரதமர், அந்த மாணவர்களுக்கு இந்தியாவில் தேர்வு நடத்த உக்ரேனிய கல்வி நிறுவனங்கள் எடுத்த முடிவை வரவேற்றார். போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் தெரிவித்தார். இந்த நிலையை சீர் செய்ய இந்தியாவும், தானும் தனிப்பட்ட முறையில் அனைத்தையும் செய்யத் தயாராக உள்ளதாகப் பிரதமர் அவரிடம் கூறினார். உக்ரைன் மக்களுக்கு இந்தியா தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கும் என்று பிரதமர் கூறினார். உக்ரைனின் தற்போதைய நிலைமை குறித்து அதிபர் செலென்ஸ்கி பிரதமருக்கு விளக்கினார். இரு தரப்பினரும் தொடர்ந்து தகவல்களைப் பரிமாரிக்கொள்ள ஒப்புக்கொண்டனர்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News