தஞ்சை சுய உதவிக்குழு தயாரிப்பு: மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் பாராட்டு!

பிரதமர் நரேந்திர மோடி மிகவும் கவர்ந்த தஞ்சை சுய உதவி குழுவின் தயாரிப்புகளை பிரதமர் மனமாரப் பாராட்டி உள்ளார்.

Update: 2022-05-31 01:10 GMT

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் மோடி அவர்கள் வானொலியில் உரையாற்றிய குரல் நிகழ்ச்சி என்பது இந்திய மக்கள் மனதில் தனி இடத்தைப் பிடித்திருக்கிறது. குறிப்பாக பிரதமர் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறந்து விளங்கும் நபர்களை இந்த நிகழ்ச்சியில் பாராட்டு தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவிப்பார். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் அமைந்துள்ள தஞ்சை மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் தனக்கு அனுப்பிய நினைவு பொருளை, அன்புடன் ஏற்று அந்தக் குழுவிற்கு தன்னுடைய மனமார்ந்த நன்றியையும் தெரிவித்து உள்ளார். 


குறிப்பாக தஞ்சாவூரை சேர்ந்த மகளிர் சுய உதவி குழு பிரதமர் அலுவலகத்திற்கு தன்னுடைய குழு சார்பில் தஞ்சாவூரில் சிறந்து விளங்கும் தலையாட்டும் பொம்மை குறிப்பாக தன்னுடைய சங்கத்தில் இருந்து தாங்களே சுயமாக தயாரித்த பொருளை பிரதமர் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். குறிப்பாக தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அருகே மகளிர் சுய உதவிக் குழுக்களின் ஆள் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏற்ற வகையில் பிரதேசமாக விற்பனை அங்காடி துவங்கிய மகளிர் சுய உதவி குழுவில் ஒரு ஜோடி இந்த பொம்மைகளை பிரதமர் நரேந்திர மோடிக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பி வைத்துள்ளார். 


இந்நிலையில், வானொலியில் தனது 89-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தாரகைகள் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார். இதில் அவர் பற்றி கூறுகையில், தமிழகத்தின் தஞ்சாவூரை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் எனக்கு மனம் நிறைந்த ஒரு பரிசை அனுப்பி உள்ளார்கள் அது சிறப்பான குறிப்பாக தஞ்சாவூர புவிசார் குறியீடு பெற்று விளங்கும் தலையாட்டி பொம்மை தனக்கு மிகவும் பிடித்த இருப்பதாகவும், மேலும் அந்தக் குழுக்களுக்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து இருப்பதாகவும் அவர் கூறினார். 

Input & Image courtesy: Indian Express

Tags:    

Similar News