ஜனாதிபதி முதல் நிதி அமைச்சர் வரை பெண்கள் தான்: இந்தியாவின் பட்ஜெட்டை உலக நாடுகளும் பார்க்கும் பிரதமர் பெருமிதம்!

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றுவது மிகவும் பெருமிதமான தருணம் என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2023-02-01 01:32 GMT

பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒருமித்த கருத்துக்களுடன் ஆக்கபூர்வமான விவாதத்தை எதிர்பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செய்தியாளர்களுக்கு தன்னுடைய பேட்டியின்போது தெரிவித்து இருக்கிறார். பிப்ரவரி ஒன்றாம் தேதி பாராளுமன்ற பட்ஜெட் தாக்கல் என்பது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துக்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதத்தை முன்வைக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் எதிர்க்கட்சிகளின் குரலை தாங்கள் மதிப்பதாகவும் கூட்டுத்தொடருக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.


மேலும் பார்லிமென்ட் கூட்டுத் தொடர் இன்று ஜனவரி 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறும் பொழுது, இந்த கூட்டத்தொடரில் ஒருமித்த கருத்துக்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை ஜனாதிபதி பார்லிமென்டில் உரையாற்றுவது நமக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். குறிப்பாக நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு பெண்களுக்கான மரியாதைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக இது அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


மேலும் நமது ஜனாதிபதியை எண்ணி எம்பிக்கள் பெருமைப்பட வேண்டும். நம் நமது நிதி அமைச்சரும் ஒரு பெண் தான் அவர் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். பட்ஜெட்டை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் இன்று உற்று நோக்குவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News