மலிவு விலையில் தரமான மருந்து வழங்கும் PMBJP திட்டம்: மிளிரும் குதுப்மினார்!
மலிவு விலையில் தரமான மருந்துகளை மக்களுக்கு வழங்கும் பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி பரியோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக மிளிரும் குதுப்மினார்.;
பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி பரியோஜனா(PMBJP) என்பது மக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்காக மருந்துத் துறையால் தொடங்கப்பட்ட பிரச்சாரமாகும். PMBJP ஸ்டோர்கள் பொது மருந்துகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மலிவான விலையில் மருந்துகள் கிடைக்கின்றன. ஆனால் அவை விலையுயர்ந்த பிராண்ட் மருந்துகளுக்கு சமமான தரம் மற்றும் செயல்திறனுடன் உள்ளன. ஜன் ஔஷதி கேந்திராக்கள் மருந்துகளின் விலை குறித்த மக்களின் அச்சத்தை குறைத்துள்ளதாக பிரதமர் மோடி அவர்கள் இந்த விழாவில் தனது உரையில் கூறினார்.
மலிவு விலையில் ஜெனரிக் மருந்துகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜன் ஔஷதி கேந்திராக்களால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனடைந்துள்ளதாகவும், அங்காடிகள் மூலம் சுமார் 13,000 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப் பட்டுள்ளதாகவும் இந்த விழாவின் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும், 'ஜன் ஒஷதி திவாஸ்' விழாவில், 'ஜன் ஔஷதி பரியோஜனா' பயனாளிகளுடன் அவர் உரையாடி, அவர்களிடமிருந்து திட்டம் குறித்து கருத்துக்களைப் பெற்றார். "இன்று, நாட்டில் 8,500 க்கும் மேற்பட்ட ஜன் ஔஷதி கேந்திராக்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் வெறும் அரசு அங்காடிகள் மட்டுமல்ல, சாமானியர்களின் தீர்வு மையங்களாக மாறி வருகின்றன" என்று பிரதமர் மோடி அவர்கள் கூறினார். புற்றுநோய், காசநோய், நீரிழிவு, இதயம் போன்ற நோய்களுக்கான சிகிச்சைக்குத் தேவையான 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலையை தனது அரசு நிர்ணயித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
ஜெனரிக் மருந்துகளின் பயன்பாடு மற்றும் ஜன் ஔஷதி பரியோஜனாவின் பலன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 'ஜன் ஒஷதி வாரம்' கொண்டாடப்படுகிறது. இந்த வாரத்தில் பிரதம மந்திரியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, மருந்துகள் மலிவு விலையில் மற்றும் குடிமக்களுக்கு அணுகக்கூடிய வகையில், இப்போது நாடு முழுவதும் 8,500 க்கும் மேற்பட்ட ஜன் ஔஷதி கடைகள் உள்ளன, கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கியதாக PMO தெரிவித்துள்ளது. எனவே இவற்றை சிறப்பிக்கும் வகையில் தற்போது தொழில்நுட்பம் மற்றும் அழகின் அற்புதமான சங்கமாக குதுப்மினார் ஜன் ஔஷதி மற்றும் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கருப்பொருளுடன் மார்ச் 5 முதல் 7 வரை ஒளிரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy: ABP live News