உக்ரைன் ரஷ்ய போர் பேச்சு வார்த்தை மூலம் மட்டுமே தீர்வு: பிரதமர் மோடி வலியுறுத்தல்!

உக்ரைன் ரஷ்யா போர் விவகாரத்தில் பேச்சு வார்த்தை மட்டுமே தீர்வாக இருக்கும் என்று புதினிடம் தொலைபேசியில் பிரதமர் மோடி வலியுறுத்தல்.

Update: 2022-12-18 07:34 GMT

உக்ரைன் போரில் பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு என்று ரஷ்ய அதிபர் புதின் இடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக இந்திய அரசியல் உச்சி மாநாடு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு வந்திருந்தார். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு இந்த உச்சி மாநாடு ரஷ்யாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் உக்ரையுடன் போர் காரணமாக இந்திய அரசியல் உச்சி மாநாடு குறித்து அறிவிப்பை ரஷ்யா வெளியிடவில்லை. இந்த சூழலில் ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியீட்டுள்ள செய்து குறிப்பில், உக்ரைன் போர் குறித்து புதின் இடம் பிரதமர் மோடி பேசியதாகவும், அந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு என்று மோடி வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


மேலும் ஜி-20 மாநாட்டிற்கு இந்திய தலைமை ஏற்றுவது குறித்து இந்திய ரஷ்ய இடையிலான ஆற்றல் ஒத்துழைப்பு வர்த்தக முதலீடுகள் போன்றவற்றை குறித்து பிரதமர் மோடி கலந்து பேசுவதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் ரஷ்யா அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் படி, பிரதமர் மோடி இடம் உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவின் அடிப்படை மதிப்பீடுகள் குறித்து ரஷ்ய அதிபர் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News