உச்ச நீதிமன்ற நீதிபதி வழங்கிய அருமையான யோசனை: பிரதமர் பாராட்டு!

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் கிடைப்பதற்கு வகை செய்ய வேண்டும் என்ற தலைமை நீதிபதியின் யோசனைக்கு பிரதமர் வரவேற்பு.

Update: 2023-01-24 02:29 GMT

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் வழங்குவது குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி T. Y. சந்திரசூட் தெரிவித்த யோசனையைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறுகையில், "அண்மையில் நடைபெற்ற விழா ஒன்றில், தலைமை நீதிபதி திரு டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வதற்காக செயலாற்ற வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசினார்.


அதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் எனவும் அவர் பரிந்துரைத்தார். இது ஒரு பாராட்டுக்குரிய சிந்தனை ஆகும். இது பலருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உதவும் என்று பிரதமர் கூறியுள்ளார். பிரதமர் மேலும் கூறுகையில், இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. அவை நமது கலாச்சார உணர்வுகளை பிரதிபலிக்கின்றன. தாய்மொழியில் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளைப் படிக்கும் வாய்ப்பை வழங்குவது உட்பட இந்திய மொழிகளை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது" என கூறினார்.  


இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். எனவே உச்ச நீதிமன்ற நீதிபதியின் இது ஒரு யோசனைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய பாராட்டை தெரிவித்து இருக்கிறார். மேலும் அவற்றை இந்தியாவில் கொண்டு வருவதற்கான பல்வேறு முயற்சிகள் எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 

Input & Image courtesy: News

Tags:    

Similar News