போப் ஆண்டவரிடம் குறும்புத்தனம் செய்த சிறுவன்: வைரலாகும் வீடியோ !
போப் ஃப்ரான்சிஸ் அணிந்திருந்த பாபெல் தொப்பியை எடுக்க முயன்ற சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
குழந்தைகள் என்றால் அவர்களுடைய குறும்புத்தனத்திற்கு அளவே இருக்காது. ஆனால் அவர்கள் செய்யும் எதார்த்தமான செயல்கள் கூட மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கக் கூடியதாக தான் இருக்கும். அந்த வகையில் தற்போது, இத்தாலியின் நடைபெற்ற ஒரு பிரார்த்தனை கூட்டத்தின் போதும், 10 வயது சிறுவனின் செயல்கள் அரங்கத்தில் கொண்டவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இத்தாலியின் வாடிகன் நகரில் பொது மக்கள் பங்கேற்கும் மத நிகழ்வில் ஃபோப் பிரான்சிஸ் பங்கேற்றிருந்தார்.
அந்த நிகழ்வில் போப் இருக்கையில் அமர்ந்திருக்கும் மற்றொரு நபர் மதப் பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். அப்போது மேடையில் ஏறிய 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் போப் ஃப்ரான்சிஸுக்கு அருகில் சென்று அவர் தலையில் அணிந்திருந்த பாபெல் தொப்பியை எடுக்க முயன்றான். தொடர்ந்து ஐந்து தடவை வரையில் போப்பிடமிருந்து அந்தத் தொப்பியை சிறுவன் எடுக்க முயன்றான். போப்பும் கோபம் கொள்ளாமல் அமைதியாக இருந்தார். அந்தச் சிறுவனின் செய்கையால் அரங்கில் கூடியிருந்த மக்கள் பலரும் வாய்விட்டு சிரித்தனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் சிறுவனின் செயலுக்கு சபாஷ் தெரிவித்துவருகின்றனர். தைரியமாக யாருக்கும் பயப்படாமல் மேடைக்கு சென்று, சிறுவன் செய்த செயல்களை பலரும் பாராட்டி உள்ளார்கள். பயம் என்றால், என்ன? என்பதை அறியாத இந்த வயதில் குழந்தைகள் செய்யும் அனைத்து விஷயங்களும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாகும் விதமாகத்தான் உள்ளது.
Input & Image courtesy:News 18