பிரதமர் விஜயம் - பா.ஜ.க கொடிகள் அகற்றப்பட்டதால் பதற்றம்

நாளை பிரதமர் மோடி தமிழகம் வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.;

Update: 2022-11-10 12:10 GMT

நாளை பிரதமர் மோடி தமிழகம் வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி நாளை காந்திகிராமம் வருவதை முன்னிட்டு மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெங்களூரில் இருந்து தனி விமான மூலம் நாளை பிற்பகல் மதுரை வரும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் அருகே உள்ள காந்த கிராம பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். இதற்காக அங்கு ஹெலிகாப்டர் இறங்குவதற்கான இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் பிரதமரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சியினர் வரவேற்கின்றன. அதன் பிறகு காந்திகிராம பல்கலைக்கழகத்தின் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகின்றார். அவருடன் ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் பங்கேற்கின்றனர் பிரதமர் வருவதை முன்னிட்டு 3000 போலீசார் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிரதமரை வரவேற்க பா.ஜ.க'வினர் கொடிகளை கட்டியதை காவல்துறையினர் அகற்றியதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.


Source - CTR Nirmal Kumar Tweet 

Similar News