புதுக்கோட்டையில் வெறிபிடித்த நாய் போல சிறுமியை கடித்து குதறிய காமூகன் - ஐந்தே மாதங்களில் இரட்டை மரண தண்டனை!

புதுக்கோட்டையில் வெறிபிடித்த நாய் போல சிறுமியை கடித்து குதறிய காமூகன் - ஐந்தே மாதங்களில் இரட்டை மரண தண்டனை!;

Update: 2020-12-30 06:57 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவுடையார் கோவில் அருகே ஏழு வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடந்து வந்த வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவுடையார்கோவில் அருகே மன நிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் ஏழு வயது மகள் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி அந்த சிறுமி வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமானார்.

சிறுமியை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் ஜூலை ஒன்றாம் தேதி மாலையில் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மேலும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அந்த சிறுமி ஆடைகளின்றி சடலமாக கிடந்தார்.

இது தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்துமாறு உறவினர்கள் போராடிவந்த நிலையில் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பூ வியாபாரியை பிடித்து விசாரித்த போது நடந்த உண்மை தெரிய வந்தது.

சிறுமியின் தந்தை கூலித்தொழிலாளி என்பதால் தினமும் வேலைக்கு சென்ற பின்னர் வீட்டில் மன நிலை பாதிக்கப்பட்ட தாய் மட்டும் உள்ள நிலையில் சிறுமியை சரியாக கவனித்துக் கொள்ள ஆட்கள் இல்லை என்று கூறப்படுகின்றது. இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட பூவியாபாரி ராஜா அந்த சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து பழக்கப்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்த அன்று சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ராஜா, உடல் முழுவதும் வெறிபிடித்த நாய் போல கடித்து குதறியது தெரிய வந்துள்ளது..

வலி பொறுக்க முடியாமல் அலறித் துடித்த சிறுமியை மறைத்து வைத்திருந்த கதியைக் கொண்டு கரகரவென  கழுத்தை அறுத்து கொலை செய்து சடலத்தை ஊருணியில் உள்ள செடிகளின் மறைவில் போட்டு மூடிவிட்டு தப்பியுள்ளதாக தெரிகிறது.

ராஜா மீது போக்சோ, கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம், ராஜாவுக்கு இரட்டை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Similar News