அவதூறு வழக்கின் தீர்ப்பு என்ன... மீண்டும் MP ஆகிறரா ராகுல் காந்தி!

அவதூறு வழக்கின் மீதான ராகுல் காந்தி தன்னுடைய வாதத்தை தற்போது முன்வைத்து இருக்கிறார்.

Update: 2023-04-15 04:18 GMT

ராகுல் காந்தி பிரச்சாரப் பயணத்தின் போது மோடி என்ற பெயர் கொண்ட சமூகத்தின் அனைவரையும் காயப்படுத்தி இருக்கிறார். இதன் காரணமாக தான் அவர் மீது அவதூறு வழக்கு போடப்பட்டு இருக்கிறது. இதனை எதிர்த்து இவர் சூரத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து இருந்தார். அதன்படி அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, மேலும் ஜாமின் நீடிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.


இந்நிலையில் தன் மீது போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்து இருக்கிறார். குறிப்பாக அந்த விசாரணை சூரத் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நடந்தது. அப்பொழுது ராகுல் காந்தி சார்பில் மூத்த வக்கீல் சீமா ஆஜராகி வாதாடியிருக்கிறார். குறிப்பாக அவர் கூறுகையில், விசாரணை கோட்டின் போது ராகுல் மீதான வழக்கின் விசாரணை நடுநிலையாக நடைபெறவில்லை.


ஏனென்றால் இங்கு வழங்கப்பட்ட அனைத்து ஆதாரம் மின்னனு அடிப்படையானது தேர்தலின் போது பேசிய பேச்சை 100 கிலோமீட்டர் அப்பாலிருந்து ஒருவர் டி.வி செய்தியில் கேட்டு அவர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். எனவே இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனை தேவையில்லை என்று வாதாடி இருக்கிறார். மேலும் சம்பவம் நடந்த இடம் ஒன்று, வழக்கு போடப்பட்ட இடம் ஒன்று என்று ராகுல் காந்தியின் வழக்கறிஞர் சுட்டுக்காட்டு இருக்கிறார். அப்பொழுது பூர்ணேஷ் மோடி வழக்கறிஞர், வழக்கு விசாரணையின் போது எதிர்ப்பு தெரிவிக்காமல் தற்போது இப்படி பிரச்சனை செய்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இந்த வழக்கின் தீர்ப்பானது ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. 20ஆம் தேதி இதனுடைய தீர்ப்பு வழங்கப்படும் என்று குறிப்பிட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News