ராகுல் காந்தி லண்டனில் நம் நாட்டை விமர்சித்த விவகாரம்: மன்னிப்பு கேட்க பா.ஜ.க தீர்மானம்!

ராகுல் காந்தி சமீபத்தில் லண்டனில் இந்தியாவைப் பற்றி விமர்சித்த காரணத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க தீர்மானம்.

Update: 2023-03-15 03:40 GMT

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நம் நாடு குறித்து லண்டனில் பேசும் பொழுது விமர்சனங்களை ஏற்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார். இதற்காக அவர் லண்டனில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததற்கு தற்பொழுது மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பா.ஜ.க எம்.பிக்கள் பார்லிமெண்டில் நேற்று அமலியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதனால் அலுவலகம் பாதிக்கப்பட்டு இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமைதிக்காக நேற்று பார்லிமென்ட் இரண்டு சபைகளிலும் ஒன்று கூடி வரைந்த எம்.பிக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு பாதுகாப்பு துறை அமைச்சர் பேசினார்.


அப்பொழுது காங்கிரஸ் எம்.பி ராகுல் இந்த சபையின் உறுப்பினர் அவர். சமீபத்தில் லண்டன் பயணம் மேற்கொண்ட பொழுது அவர் பேசிய பேச்சுக்கள் இந்தியாவை அவமதிப்பதாக இருக்கிறது. அவரது பொறுப்பற்ற பேச்சு கண்டனத்திற்குரியது. இங்குள்ள அனைத்து நபர்களும் இந்தியாவை அவமதித்த ராகுல் காந்தியை கண்டிக்க வேண்டும். அவர் சபையின் முன்பு வந்து தான் செய்ததை நினைத்து பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் பேசி இருக்கிறார்.


அமைச்சரின் இந்த ஒரு பேச்சு காரணமாக காங்கிரஸ் எம்.பிக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து கோஷங்களை எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு பதில் தரும் வகையில் பா.ஜ.க எம்.பிக்களும் கடும் அமலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பேசும் பொழுது, ராகுல் காந்தி நம்முடைய ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி இருக்கக் கூடாது. அண்டைய மண்ணில் இருந்து சொந்த நாட்டிற்கு எதிராக பேசுவது மிகப்பெரிய குற்றம். அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவை துவங்கியதுமே பா.ஜ.க எம்.பிக்கள் ராகுல் குறித்த விவகாரத்தை கிளப்பினார்கள்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News