ஆட்சிக்காலத்தில் ஜல்லிக்கட்டை தடை செய்து விட்டு இப்போது நாடகம் போடும் ராகுல் காந்தி!

ஆட்சிக்காலத்தில் ஜல்லிக்கட்டை தடை செய்து விட்டு இப்போது நாடகம் போடும் ராகுல் காந்தி!;

Update: 2021-01-14 09:36 GMT
மத்திய அரசின் விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறிக் கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மதுரை அவனியாபுரத்தில் நடக்கும் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டை கண்டு களிக்க இருக்கிறார். இந்த சமயத்தில் இடையில் சில ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் தமிழ் மக்கள் வேதனைப்பட்டதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

2017-ஆம் ஆண்டு சிறப்புச் சட்டம் கொண்டு வந்து மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த ஆவண செய்யும் முன், முதன் முதலாக கடந்த 2006-ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. ரேக்ளா ரேசை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி பானுமதி, ரேக்ளா ரேசுடன், ஜல்லிக்கட்டு, எருது விடுதல், சேவல் சண்டை என்று பொங்கலுடன் தொடர்புடைய பல விளையாட்டுக்களைத் தடை செய்தார்.

அதன் பின்னர் 2011-ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது, சுற்றுச்சூழல் விவகாரத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் காளைகளை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கினார். ஜல்லிக்கட்டில் காளைகள் பயன்படுத்தப்படுவதால் இதனால் ஜல்லிக்கட்டு நடத்தவும் தடை ஏற்பட்டது.
 

இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த போது, சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் முடிவைச் சுட்டிக் காட்டி உச்சநீதிமன்றம் ஒரேயடியாக ஜல்லிக்கட்டைத் தடை செய்தது‌. காங்கிரஸ் ஜல்லிக்கட்டை "காட்டு மிராண்டித்தனம்" என்று அழைத்தது. அதன் பத்திரிக்கையான நேஷனல் ஹெரால்டில் 'தமிழர்கள் தங்களது ஆண்மையை உறுதிப்படுத்தவே ஜல்லிக்கட்டு நடத்துகிறார்கள்' என்று கீழ்த்தரமாக கட்டுரை எழுதியது. 2016ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில்
'ஜல்லிக்கட்டு தடையை ஆதரிப்போம்' என்று வாக்குறுதி அளித்தது.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது தான் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்னர் காளைகளை காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் Humane Society International, PETA, AWB போன்ற அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் இதை எதிர்த்து தடை உத்தரவு பெற்றன.

Humane Society International அமைப்புக்கு 2015, டிசம்பர் 15 அன்று மன்மோகன் சிங் ஒரு கடிதம் எழுதினார். அதில் "உங்கள் நோக்கம் உயர்ந்தது. இந்த கொடூரமான காளை விளையாட்டுக்கள் நடத்துவதை நாம் தடுக்க வேண்டும். உங்களது குறிக்கோளை வெற்றிகரமாக அடைய வாழ்த்துக்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

மெரினா போராட்டத்துக்கு பின்னர் காங்கிரசில் ஒரு தரப்பினர் வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டை ஆதரிப்பதாக நாடகம் போட்ட போதும், மன்மோகன் சிங், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட தலைவர்கள் வெளிப்படையாகவே பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசின் செயல்பாடுகளை விமர்சித்தனர். இப்படிப்பட்டவர்கள் தான் இன்று விவசாயிகளுக்கு ஆதரவு என்ற பெயரில் ஜல்லிக்கட்டைக் கண்டு களிக்க வருகிறார்கள்.

Similar News