ஆரம்பப் பள்ளி கட்டிடத்தில் கல்வி அலுவலகம் ஆக்கிரமிப்பு - வரண்டாவில் படிக்கும் மாணவர்கள்!

ராமநாதபுரத்தில் வகுப்பறைகளை கல்வி அலுவலகத்திற்கு ஒதுக்கியதால் பள்ளிக்கூட வரண்டாவில் பாடம் படிக்கும் மாணவர்கள் நிலைமை.

Update: 2022-09-16 02:14 GMT

ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் பகுதியில் அமைந்துள்ளது தான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான சுமார் 126 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றார்கள். இந்நிலையில் இந்த பள்ளிக்கான எட்டு வகுப்பறைகளில் நான்கு வகுப்பறைகளை மாவட்ட கல்வி அலுவலகத்திற்கும்,, இரண்டு வகுப்பறைகளை வினாத்தாள் உள்ளிட்டவைகளை வைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.


இரண்டு வகுப்பறைகளில் மட்டும்தான் மூன்று வரையிலான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.. நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பள்ளியில் உடைய வராண்டாவில் பகுதி மற்றும் மரத்தடிகளில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. பெற்றோர் கோரிக்கை விடுத்த நிலையில், கல்வித்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த குழந்தைகளின் பெற்றோர் முற்றுகையிட்டு கல்வி அலுவலகத்திற்கு அலுவலர்களை செல்லவிடாமல் மாடிப்படிகளில் உட்கார்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன் காரணமாக இந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.


இது குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலகர் பாலு முத்து, மண்டல கல்வி அலுவலர் முருகம்மாள், தாசில்தார் முருகேசன் ஆகியோர் அங்கு விரைந்து சென்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். மாணவர்களுக்கு வகுப்பறைகளை உடனடியாக ஒதுக்கி தர தர வேண்டும் என்பதில் பெற்றோர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து 20 நாட்கள் கால அவகாச தருமாறும் அதற்குள் இரண்டு வகுப்பறைகள் ஒதுக்கி தருவதாகவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Input & Image courtesy: Maalaimalar News

Tags:    

Similar News