மணல் சிற்பம் ஓவியங்களில் ராமாயண கதைகள்: சாதனை படைக்கும் அயோத்தி மணல் கலைஞர் !

மணல் சிற்பக் ஓவியங்களை ராமாயணக் கதைகளை விளக்கும் அயோத்தி சேர்ந்த மணல் கலைஞர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

Update: 2021-11-08 13:42 GMT

அயோத்தியில் மணல் கலைஞர் ரூபேஷ் சிங் ராமாயணத்தில் வரும் காட்சிகளை மணலில் வரைந்து சாதனை படைத்திருக்கிறார். ராமாயணத்தின் புகழ்பெற்ற அத்தியாயங்களான பாரத் மிலாப், ராமர், லட்சுமணன், சீதா ஆகியவற்றை மணலில் உருவாக்கி உள்ளார். அயோத்தியில் தீபாவளி பண்டிகையை பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதனையொட்டி, மணல் கலைஞரான ரூபேஷ் சிங், ராமாயணத்தின் புகழ்பெற்ற அத்தியாயங்களான பாரத் மிலாப், ராமர், லட்சுமணன், சீதா ஆகியவற்றை மணலில் உருவாக்கி உள்ளார். இந்த சிற்பங்களை திரேதா யுகத்தின் அடையாளமாக உருவாக்கி இருக்கிறார். இந்து மதத்தில் உள்ள நான்கு யுகங்களில் திரேதா யுகமும் ஒன்று ஆகும்.


இதுபற்றி மணல் கலைஞரான ரூபேஷ் சிங் கூறுகையில், "எனது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் ஆகும். வரைய பல பொருட்கள் தேவைப்படும். எனவே தான், என்னுடைய பெற்றோரை தொந்தரவு செய்யாமல் மணலில் ஓவியம் வரைய தொடங்கினேன். எனது பெற்றோருக்கு கலை தொடர்பான கருவிகளின் செலவுகளை தாங்க முடியாததால், நான் இந்த மணல் கலையை தேர்ந்தெடுத்தேன். மலிவு விலையில் மணலைப் பயன்படுத்தி ஓவியங்களை உருவாக்க தொடங்கினேன்.


மக்களிடமிருந்தும், ஊடகங்களிடமிருந்தும் எனக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்துள்ளது. இது மிகவும் தனித்துவமான கலை வடிவம் ஆகும். உலகின் மிகப்பெரிய மணல் கலையை உருவாக்கும் கனவு எனக்கு உள்ளது. அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்" என்று அவர் கூறினார். இந்த மணல் சிற்பம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Input & Image courtesy:Republicworld





Tags:    

Similar News