இனி ரேஷன் கடைகள் எல்லாம் டிஜிட்டல் மயம்: மோடி அரசு அதிரடி ஆக்சன் பிளான்!
இனி ரேஷன் கடைகளில் தவறு நடப்பதற்கு வாய்ப்புகள் இல்லை அந்த வகையில் ரேஷன் கடைகள் அனைத்தும் புதிய பொலிவுடன் செயல்படும்.
ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்கள் தங்களுக்கு உரிய உணவுப் பொருட்களை பெற்று வருகிறார்கள். குறிப்பாக கொரோனா படத்தில் கூட ஏழை எளிய மக்கள் பசி என்று வாழக்கூடாது என்பதற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் ஏழை எளிய மக்களுக்கு கூடுதலான உணவுகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முறையில் 5 கிலோ அரிசி அல்லது 5 கிலோ கோதுமைகளை வழங்கியது. ரேஷன் கடைகளில் நடக்கும் சில மோசடிகள் காரணமாக மக்கள் ஆங்காங்கே பாதிக்கப்படுகிறார்கள்.
அதனை கருத்தில் கொண்டு தற்பொழுது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ரேஷன் கடைகளை கொண்டு வருவதன் மூலமாக மக்களுக்கு சரியான உணவுப் பொருட்கள் கொண்டு போய் சேர்கிறது. குறிப்பாக ரேஷன் கடைகளில் மக்கள் வாங்கும் பொருட்கள் அவர்கள் கொடுத்த மொபைல் நம்பருக்கு SMS வழியாக தகவல் பெறப்படுகிறது. தங்கள் எவ்வளவோ ரேஷன் கடைகளில் இருந்து வாங்கி இருக்கிறோம் என்பது பற்றியான விவரங்கள் இதில் அடங்கி இருக்கிறது. எனவே இந்த விவரங்கள் மூலமாக திருட்டு என்பது அறவே ஒழிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் ரேஷன் கடைகளுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று மத்திய அரசின் சார்பில் வெளியிட்டு உள்ளது. அதன்படி தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகளை சரியான அளவில் கொடுக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிடைக்கும் உணவு தானியங்கள் சரியாக கிடைக்கிறதா? என்பதை தற்போது மின்னணு பாயின்ட் ஆப் சேல் சாதனங்கள் மூலம் உறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்னணு பாயின்ட் ஆப் சேல் சாதனங்கள் இதில் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
Input & Image courtesy: News