புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை பயன்படுத்துவதில் இந்தியா நான்காம் இடம் - தட்டி தூக்கி முன்னேறும் மோடி அரசு!
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை பயன்படுத்துவதில் இந்தியா நான்காம் இடத்தில் முன்னேறி இருப்பதாக மத்திய அமைச்சர் பெருமிதம்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் மத்திய அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. குறிப்பாக ஒரு முறை பயன்படுத்தி தீர்ந்து போகும் ஆற்றலை நாம் அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக அடுத்த வரும் சந்ததியினருக்கு இது பற்றி தெரியாமல் போய்விடும். ஆனால் நாம் புதுப்பக்கத்தக்க வளங்களை பயன்படுத்துவோமானால் அது மீண்டும், மீண்டும் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. இதன் காரணமாக பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க வளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
சூரிய சக்தி மற்றும் மின்சார வாகனங்கள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தூய்மையான ஆற்றில் மாற்றத்திற்கான உறுதிபாட்டை நிறைவேற்று முன்னுரிமை கொண்ட சிறிய மாடுலர் ரியாக்டர்களை மேம்படுத்த இந்திய நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறியிருக்கிறார். நிதி ஆயோக் மற்றும் எரிசக்தி துறை ஏற்பாடு செய்த சிறிய மாடுலர் ரியாக்டர்கள எஸ்.எம்.ஆர் குறித்த பயிற்சி நிகழ்வில் ஜிதேந்திர சிங் பேசும் பொழுது, இந்தியாவில் இந்த துறை முக்கியமான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் தனியார் துறை மற்றும் ஸ்டார்ட் நிறுவனங்கள் பங்கேற்க ஆராய வேண்டும் என்று கூறியிருந்தார்.
எஸ்.எம்.ஆர் தொழில்நுட்பம் வணிக ரீதியாக கிடைப்பதை உறுதி செய்வதற்கு இரண்டு முக்கிய காரணிகளாக தொழில்நுட்ப தகவல் பரிமாற்றம் மற்றும் நிதி ஆதாரம் அமைந்துள்ளது என்பதை அவர் வலியுறுத்தியினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்படுத்துவதில் இந்தியா நான்காம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. மிகப்பெரிய பொருளா தரத்தில் வலுவடைந்த நாடுகள் கூட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்படுத்துவதில் இந்தியாவை ஒரு முன் உதாரணமாக கொண்டிருக்கிறது என்று கூறியிருந்தார்.
Input & Image courtesy: Maalaimalar