200 ஆண்டு பழமைவாய்ந்த பாரம்பரிய கிணறு: புதுப்பித்த ரயில்வே துறையை பாராட்டிய பிரதமர்!

200 ஆண்டு பழமைவாய்ந்த பாரம்பரிய கிணற்றைப் புதுப்பித்ததற்காக செகந்தராபாத் மண்டல ரயில்வே துறையை பாராட்டிய பிரதமர்.

Update: 2023-02-27 03:39 GMT

200 ஆண்டு பழமைவாய்ந்த பாரம்பரிய கிணற்றைப் புதுப்பித்ததற்காக செகந்தராபாத் மண்டல ரயில்வே பயிற்சி நிறுவனத்தைப் பிரதமர் பாராட்டினார். செகந்தராபாத் மண்டல ரயில்வே பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள 200 ஆண்டு பழமைவாய்ந்த பாரம்பரிய கிணற்றைப் புதுப்பிப்பதற்கான முயற்சியைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். மேலும், செகந்தராபாத் மண்டல ரயில்வே பயிற்சி நிறுவனம், தண்ணீர் சேமிப்பு வசதிக்காக அதைச் சுற்றிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளைக் கட்டமைத்துள்ளது.


ரயில்வே அமைச்சகத்தின் ட்விட்டர் செய்திக்கு பதிலளித்து, பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது, "இது பாராட்டுக்குரிய முயற்சி". புது மாறிவரும் சூழ்நிலையில் கோடை களத்தில் அதிகமாக தண்ணீர் தேவைப்படும் ஒரு சூழ்நிலையில் நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம். எனவே கோடை காலத்திற்கு வெப்பத்தை தணிப்பதற்காக இந்த கிணற்றை சுத்திகரிப்பது அற்புதமான செயலாக கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.


மேலும் 200 ஆண்டு பழமைவாய்ந்த பாரம்பரிய கிணற்றைப் புதுப்பித்ததற்காக செகந்தராபாத் மண்டல ரயில்வே பயிற்சி நிறுவனத்தைப் பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டையும் வருகிறார்கள். கிணற்றை சுத்திகரித்து செயலோடு மட்டுமல்லாது அதை சுற்றிலும் மழைநீர் சேமிப்பு தொட்டிகளும் தற்பொழுது வைக்கப்பட்டு இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News