ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ரோபோ ஆற்றிய உரை !
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக ஒரு உரை ஆற்றிய செயற்கை நுண்ணறிவு ரோபோ.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பல மதிப்புறு அறிஞர்கள் பேசியிருப்பார்கள். Artificial Intelligence என்று அறியப்படும் செயற்கை நுண்ணறிவு இயந்திரம்தான் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தற்போது முதல் முறையாக பேசியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எப்போதும் நெறிமுறைகளுடன் செயல்படாது. எனவே அந்த தொழில்நுட்பம் அதிகாரம் பெறுவதைத் தடுக்க அதை பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்த வழி என்று அந்த இயந்திரம் பேசியது.
எனவே பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக இப்படி ஒரு செயற்கை நுண்ணறிவு மிக்க ரோபோ உரையாற்றுவது இதுவே முதல் முறை. செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் நெறிமுறைகள் குறித்த உரையாடல்களை வளர்த்தெடுக்கும் விதமாக இந்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தை நடத்திய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வணிகப்பிரிவான செட் வணிக பள்ளியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்துப் படிக்கும் முதுநிலை மாணவர்களால் இத்திட்டம் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்துறையின் இணை இயக்குநர் டாக்டர் அலெக்ஸ் கன்னோக் இதுபற்றி கூறுகையில், "செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் இப்படி உரையாற்றுவது அறத்தை நிலைநாட்டுவது இது போன்று இருக்காது. ஏனெனில் செயற்கை நுண்ணறிவு மனிதர்களைப் போல செயல்படும் திறன் குறைவு தான் என்றும், செயற்கை நுண்ணறிவு எப்போதும் அறத்தை அடிப்படையாக கொண்டிருக்காது என இந்த மன்றம் நம்புகிறது" என்றும் கூறினார்.
Input & Image courtesy:BBC News