'ரொட்டி தயாரித்த பில்கேட்ஸ்' - பிரதமர் மோடி பாராட்டு
உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில் கேட்ஸ் ரொட்டி தயாரித்ததை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.;
மைக்ரோசாப்ட் நிறுவன இணை நிறுவனரும் , பிரபல கோடீஸ்வரரும் ஆன பில்கேட்ஸ் தனது கையால் ரொட்டி தயாரிக்கும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பதிவேற்றி இருந்தார்.
இது வலைதளவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈரத்தது. இந்த வீடியோவை பார்த்த பிரதமர் மோடி பில்கேட்சை பாராட்டியுள்ளார். அத்துடன் சிறுதானிய உணவுகளையும் தயாரிக்குமாறு ஊக்கப்படுத்தினார்.
பில்கேட்சின் வீடியோவுக்கு அவர் அளித்த பதிலில் 'அருமை. சிறுதானிய உணவுகளும் ஏராளம் உள்ளன. அவற்றையும் நீங்கள் தயாரிக்கும் முயற்சிக்கலாம்' என கூறியிருந்தார். ரொட்டி தயாரித்த பில்கேட்சுக்கு பிரதமரின் பதிலையும் நெட்டுசன்கள் பாராட்டினர்.