எங்கோ கைது செய்யப்பட்ட ரவுடியை, பாஜக உறுப்பினர் என செய்தியை திரித்து வெளியிட்ட ஊடகங்கள்: #போலிசெய்திகள்
சென்னை துரைப்பாக்கத்தில் பதுங்கியிருந்த ரவுடி டொக்கன் ராஜாவை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
ரவுடியான டொக்கன் ராஜா மீது கொள்ளை, கொலை முயற்சி என 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் அவரை தேடி வந்தனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட டொக்கன் ராஜா, பின்னர் ஜாமின் பெற்றுக்கொண்டு தலைமறைவானார்.
சென்னையில் உள்ள முக்கிய ரவுடிகளில் ஒருவராக திகழும் சிடி ரவியின் வலதுகரமாக செயல்பட்டு வந்தார் டொக்கன் ராஜா. அவருடன் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்ட டொக்கன் ராஜா, ஒரு கட்டத்தில் சிடி ரவியின் பாதுகாவலராகவே செயல்பாட்டார்.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் போலீசார் சிடி ரவியை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரது கூட்டாளிகளை தேடி வந்த நிலையில் பலரும் தலைமறைவாக இருந்துள்ளனர்.
டொக்கன் ராஜா கைது செய்வதற்கு சரியான சமயம் பார்த்த கொண்டிருந்த போலீசார், உரிய அனுமதி கிடைத்தவுடன் துரைப்பாக்கத்தில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
டொக்கன் ராஜா வட சென்னை பாஜக மாவட்ட இளைஞரணி துணை செயாளர் பதவியில் இருப்பதாக சன் நியூஸ், இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற சில தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உண்மையில் பாஜக இளைஞரணியில் துணைச்செயலாளர் பதவியே கிடையாது. கைது செய்யப்பட்ட டொக்கன் ராஜாவின் வயது 44. ஆனால் பாஜக இளைஞரணி பதவி வகிக்க அதிகபட்ச வயது 35. அவர் பாஜக உறுப்பினரே கிடையாது. ஊடகங்கள் செய்தியை திரித்து வெளியிடுவதாக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.