மக்களின் நல்லாட்சியை நோக்கி செயல்படும் மோடி அரசு: மத்திய அமைச்சர் பெருமிதம்!
மத்திய அரசினால் தற்பொழுது 1.25 லட்சம் கோடி கருப்பு பணம் மீட்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தகவல் தெரிவித்து இருக்கிறார்.
மத்திய அரசின் தீவிர முயற்சி காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் கருப்பு பணம் மீட்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான பணத்தை இங்கு உள்ளவர்கள் பதுக்கி வைத்திருப்பதாக ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்து இருந்தார். அந்த வகையில் தற்போது அதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கிறது. மத்திய அரசின் தீவிர முயற்சி காரணமாக ரூபாய் 1.25 லட்சம் கோடி கருப்பு பணம் விற்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்து இருந்தார். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி தனியார் செய்து நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியின் போது அவர் கூறுகையில், ஏழைகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஒவ்வொரு ரூபாயிலும் 15 பைசா மட்டுமே மக்களை சென்று அடைகிறது என்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஒரு முறை கூறினார்.
ஆனால் இன்றைக்கு 100% தொகையானது பயனாளிகளை சென்றடைகிறது. குறுக்குவழி அரசியலை மையப்படுத்தி செயல் படாமல், நல்லாட்சியை நோக்கி அரசியல் திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தெளிவாக இருக்கிறார். நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்லாட்சி திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்ய டிஜிட்டல் கட்டமைப்புகளை பிரதமர் மோடி தயாரித்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அரசின் திட்டங்களை துரிதமாக நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பொதுமக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. மத்திய அரசினால் தற்பொழுது 1.25 லட்சம் கோடி கருப்பு பணம் மீட்கப்பட்டிருப்பதாகவும், 4600 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறப்பட்டிருந்தார். மக்களின் சொத்துக்களை அபகரிக்க நினைக்க எவரும் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
Input & Image courtesy: The Hindu News