ஆர்.ஆர்.ஆர் படக்குழுவிற்கு கிடைத்த கோல்டன் குளோப் விருது: பிரதமர் மோடி வாழ்த்து!

சிறந்த ஒரிஜினல் பாடலுக்கு கோல்டன் குளோப் விருதை வென்றதற்காக RRR படக்குழுவிற்கு பிரதமர் வாழ்த்தினார்.;

Update: 2023-01-12 02:43 GMT
ஆர்.ஆர்.ஆர் படக்குழுவிற்கு கிடைத்த கோல்டன் குளோப் விருது: பிரதமர் மோடி வாழ்த்து!

இந்தியாவில் மிகவும் பிரம்மாண்டமான உருவான RRR படத்திற்கு தற்பொழுது மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது. ராஜமவுலி அவர்களின் இயக்கத்தில் வெளியான இந்த ஒரு படத்திற்கு இந்தியாவில் பல்வேறு மொழிகளில் இருந்தும் சிறந்த வரவேற்பு கிடைத்து இருக்கிறது. ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் ஆகியோர் நடிப்பில் மிகவும் பிரமாண்டமான காட்சிகளுடன் இந்த படம் பார்வையாளர்களுக்கு மிகவும் பிரம்மாண்டமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, அதை முழுவதுமாக பூர்த்தி செய்து இருந்தது.


சிறந்த ஒரிஜினல் பாடலான 'நாட்ட குத்து' பாடலுக்கு தற்பொழுது கோல்டன் குளோப் விருதை வென்றதற்காக RRR இன் ஒட்டுமொத்த குழுவிற்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். RRR திரைப்படத்தின் ட்வீட்டைப் பகிர்ந்துகொண்டு, பிரதமர் ட்வீட் செய்து இந்த மகிழ்ச்சியான தகவலை அவர் பகிர்ந்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


குறிப்பாக பிரதமர் தன் ட்விட்டர் பக்கத்தில் இது பற்றி கூறுகையில், "மிகச் சிறப்பான சாதனை. எம்.எம்.கீரவாணி, பிரேம் ரக்ஷித், கால பைரவா, சந்திரபோஸ், ராகுல் சிப்லிகஞ்ச் ஆகியோருக்கு பாராட்டுக்கள். எஸ்.எஸ்.ராஜமௌலி, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் மற்றும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மதிப்புமிக்க கௌரவம் ஒவ்வொரு இந்தியரையும் மிகவும் பெருமைப்படுத்தியுள்ளது" என தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News