சிறு குழந்தைக்கு திருக்குறள் போதிக்கும் மோகன் பகவத் - ஆர்.எஸ்.எஸ் தலைவரின் திருக்குறள் பற்று
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்கள் சிறு குழந்தைக்கு திருக்குறளை கற்பிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
மோகன்ராவ் மதுகர்ராவ் பகவத் 1950ல் மகாராட்டிர மாநிலம், சந்தரபூர் என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை மதுகர் ராவ் பகவத், ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் சந்தரபூர் தலைவரும், குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகராக இருந்துள்ளார். லோக்மானிய திலக் வித்யாலையத்தில் பள்ளி படிப்பையும் ஜனதா கல்லூரியில் இளநிலை அறிவியல் பட்டமும் பெற்றவர். பஞ்சாப்ராவ் க்ரிஷி வித்யாபெத் கல்லூரியில் கால்நடை மருத்துவத்திலும். விலங்கு வளர்ப்புத் துறையிலும் பட்டம் பெற்றார்.
1975ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஏற்பட்ட நெருக்கடி நிலையின் போது ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் முழு நேரத் தொண்டராக தன்னை இணைத்துக் கொண்டார். இவருடைய பிறந்தநாள் நேற்று நடைபெற்றது. நேற்று இவர் தன்னுடைய 72 பிறந்தநாள் கொண்டாடினார். என்னதான் இவருக்கு தாய்மொழி தமிழ் இல்லை என்றாலும், தமிழில் இவருக்கு இருக்கும் ஆர்வம் அதிகம் தான். அதனை மெய்ப்பிக்கும் விதமாக வீடியோ ஒன்றுதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மோகன் பகவத் அவர்கள், சிறு குழந்தைகளுக்கு புனிதமான தமிழ் உரையாட திருக்குறளை வாசிக்க கற்றுக் கொடுக்கிறார். இதுதான் ஆர்எஸ்எஸ்-ன் உள்ளடக்கிய தேசியவாதம். திராவிட அரசாட்சியினர் காகிதத்தில் இருந்து படிக்காமல் ஒரு திருக்குறள் கூட அவர்களால் செல்ல முடியாது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் தலைவர் அவர்கள் தீயினால் சுட்ட புண் என்ற திருக்குறளை சிறு குழந்தைக்கு கற்பிக்கிறார்.
Input & Image courtesy: Twitter source