மதவாதத்தை போதிக்கும் ஆசிரியர்கள் - ஆர்.எஸ்.எஸ் அமைப்பு புகார்!
மதவாதத்தை போதிக்கின்ற ஆசிரியர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு புகார் கொடுத்து இருக்கிறது.
இந்தூர் உள்ள சட்டக்கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள் உட்பட ஆறு பேர் மீது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவ பிரிவினர் புகார் ஒன்றின் அறிந்து இருக்கிறார்கள். மதவாதத்தையும், அரசு மற்றும் இராணுவத்திற்கு எதிராக கருத்துக்களை போதிப்பதாகவும் புகாரில் கூறப்பட்டு இருக்கிறது. மேலும் மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிப்ராஜ் சிங் தலைமையிலான ஆட்சி நடக்கிறது இங்குள்ள இந்து அரசு சட்ட கல்லூரி அமைந்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.பி சார்பில் கல்லூரி முதல்வரிடம் தற்போது புகார் ஒன்று அளிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுடைய தரப்பில் இது பற்றி கூறுகையில், நான்கு முஸ்லிம் ஆசிரியர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மத அடிப்படை வாத குறித்து போதிக்கின்றார்கள். மேலும் அரசுக்கு எதிராகவும் நம் ராணுவத்திற்கு எதிராகவும் கருத்துக்களை மாணவர்கள் மீது திணிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.
இரண்டு இந்து ஆசிரியர்கள் அலட்சிய போக்கு காரணமாக அரசுக்கு எதிரான கருத்துக்களை மாணவரிடம் பரப்பி வருகின்றனர். அசைவ உணவுகளுக்கு ஆதரவாகவும் இவர்கள் பேசி வருகிறார்கள். இவ்வாறு மாணவர்கள் அளித்து புகாரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதையடுத்து ஆசிரியர்கள் ஐந்து நாட்களுக்கு பாடம் நடத்துவதற்கு கல்லூரி முதல்வர் ரகுமான் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார். மேலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar