பொங்கல் தொகுப்பில் தவறு செய்த நிறுவனங்களுக்கு ஆதரவாக நிற்கிறதா தி.மு.க அரசு - ஆர்.டி. ஐ-யில் அம்பலமான உண்மை!

Update: 2022-06-07 23:51 GMT

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு ரூ.1,296.88கோடி மதிப்பிலான பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

இந்நிலையில், சில பகுதிகளில் வழங்கப்பட்ட பொருட்களில் குறைபாடுகள் இருந்ததாக புகார்கள்எழுந்தன. மேலும், சட்டப்பேரவைஎதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி, இந்ததிட்டத்தில் ரூ.500 கோடி வரை ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பொங்கல் பரிசுப்பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் வரக் காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தவறு செய்யதவர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியில், எந்த நிறுவனமும் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அப்படி என்றால், முறைகேடுக்கு அரசு துணை போகிறதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 


Similar News