TASMAC எந்த நிறுவனத்திடமிருந்து மது பாட்டில் வாங்குகிறது என்பதை சொல்ல மறுக்கிறது - RTI மூலம் அம்பலமான உண்மை!

TASMAC எந்த நிறுவனங்களிடமிருந்து மது பாட்டில்களை வாங்குகிறது? எவ்வளவு விலை கொடுக்க அவற்றை வாங்குகிறது? என்பது பற்றிய தகவல்களை கூற தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மறுப்பு.;

Update: 2022-10-11 02:16 GMT

தமிழகத்தில் தற்போது மது கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகின்றது. ஒருபுறம் டாஸ்மாக் கடைகளின் மூலம் மாநில அரசின் வருமானம் அதிகரித்து வந்தாலும், மாநில அரசு மக்களை பற்றி கவலைப்படவில்லை என்பது சற்று வேதனையை தான் அளிக்கிறது. இது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு நபர் தமிழக அரசிடம் கேள்வியை எழுப்பி இருக்கிறார். குறிப்பாக தமிழக அரசின் கீழ் இயங்கும், தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் என்று அழைக்கப்படும் TNSMAR 2016 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான எந்த நிறுவனங்களிடம் இருந்து மது பாட்டில் வாங்குகிறது? என்பது பற்றிய தகவல்களை தர மறுத்து இருக்கிறது.


அதைப்பற்றிய தகவலை தரமுடியாது என்று பின்வாங்குகிறது தி.மு.க அரசு? தமிழக அரசு எந்த நிறுவனங்களிடமிருந்து மது பாட்டில்களை வாங்குகிறது என்பது தொடர்பான விபரங்களை எங்களால் அளிக்க இயலாது. ஏனெனில் நாங்கள் அது பற்றிய தனியான தரவுகளை பராமரிப்பது கிடையாது? நீங்கள் வேண்டுமானால் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில் சென்று நிறுவனங்களின் பெயர்களை அறிந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டு இருக்கின்றது. மேலும் மற்றொரு கேள்விக்கான எவ்வளவு மதிப்பு கொடுத்து அத்தகைய மதுபாட்டில்களை தமிழக அரசு வாங்குகிறது என்று கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.


இந்த கேள்விக்கு வணிக ரீதியிலான போட்டி மற்றும் வணிக நம்பிக்கைகள் மற்றும் ரகசியங்கள் இதில் அடங்கும். எனவே இது பற்றியான தகவல்களை தங்களால் தர முடியாது என்று குறி மறுத்து இருக்கிறது. ஆனால் இதை தி.மு.க அரசு தான் மத்திய அரசிடம் சென்று நாட்டின் முக்கிய பாதுகாப்பான ரபேல் வாங்குவது தொடர்பான விவரங்களை பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு இருந்தது. அப்பொழுது மத்திய அரசு நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை பகிரக்கூடாது என்பதற்காக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதை பகிரவில்லை. இதன் காரணமாக மத்திய அரசை ஊழலின்கீழ் சுட்டிக்காட்டுவது தி.மு.க அரசு. நீங்கள் செய்தால் அது நாட்டின் நன்மைக்காக இருக்கும் அதை மத்திய அரசு செய்தால் ஊழல் என்று குற்றம் சாட்டுவதா? என்று டுவிட்டர் பக்கத்தில், யுவராஜ் ராமலிங்கம் என்பவர் பகிர்ந்து இருக்கிறார்.

Input & Image courtesy: Twitter source

Tags:    

Similar News