ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் சிகிச்சையா?

ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் சிகிச்சை நடைபெறுகிறதா தகவல் என்ன?

Update: 2022-05-04 01:41 GMT

தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. மேலும் இந்த போரின் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலும் நீடித்த போர் உலக அளவில் முக்கியமாக ஐ.நா சபை வரை பெரும் பதட்டத்தை நீடித்தது. இதற்காக ஐநா சபையில் சேர்ந்த தலைவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார் ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் ரஷ்ய அதிபருக்கு புற்றுநோய் இருப்பதாக அவர் சிகிச்சை எடுப்பதன் காரணமாக அதிபர் பதவியில் இருந்து தற்காலிகமாக அவர் ஓய்வு எடுப்பதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு உள்ளது. 


மேலும் ரஷ்யாவின் அதிபர் புற்றுநோய் சிகிச்சை காரணமாக அவர் தற்காலிக பதவி விலகலை அந்நாட்டு ஊடகங்கள் உறுதி செய்துள்ளது. இத்தகைய ஒரு சூழலில் அடுத்த அதிபர் பதவிக்கு யார் வர இருக்கிறார் என்பது குறித்த பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளது. அடுத்த பதவிக்கு ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலா பட்ரு ஷே பொறுப்பை ஏற்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலிருந்து ஒரு செய்தி சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. 


அதிபருக்கு புற்றுநோய்க்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் இந்த அவசர முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக ரஷ்யாவின் முன்னாள் வெளியுறவுத் துறை தலைவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு உறுதி செய்துள்ளார். எனவே இத்தகைய ஒரு சூழ்நிலையில் போர் முடிவுக்கு வருமா? என்பது குறித்த பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றது. 

Input & Image courtesy:Thanthi News

Tags:    

Similar News