ரஷ்யா: உறை பனிக்குள் சிக்கிய நாயை மீட்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ !
உறை பனிக்குள் சிக்கிய நாயை மீட்க நடக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
ஐந்தறிவு உள்ள விலங்கினங்களுக்கு தனக்கு ஏற்படும் கஷ்டங்களை மற்றவர்களிடம் சொல்லும் அறிவு உள்ளது. அதிலும் குறிப்பாக நாய் போன்ற விலங்கினங்களுக்கு இது மிகுதியாக உள்ளது என்று அறிவியல் கூறுகிறது. நாய்களிடம் இருக்கும் புத்திசாலித்தனம் காரணமாக அது தனக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தன்னை தற்காத்து கொள்கிறது இல்லையெனில் மனிதர்களின் உதவிகளை நாடுகிறது. அந்த வகையில் தற்போது, ரஷ்யாவில் சில மாதங்களில் அதிகமாக பனிப்பொழிவு இருக்கும்.
அந்த நேரத்தில் உறைபனி சூழ்ந்து இருப்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி எண்ணற்ற பிரச்சனைகளும், உயிரிழப்புகளும் கூட ஏற்படும். இந்த நிலையில் ரஷ்யாவில் உள்ள மகடன் நகரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மகடன் நகர் முழுவதும் உறைபனியால் சூழப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்த ஒரு நீர்நிலையில் நாய் ஒன்று சிக்கியுள்ளது. உயிருக்கு போராடிய நிலையில் அந்த நாய் கத்தியுள்ளது. அங்கு இருந்த ஒருவர் நாயின் குரைப்பு சத்தம் கேட்டு உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தார், ஓசை வரும் திசையை பார்த்து அவர் வேகமாக சென்ற நிலையில் அங்கு உறைபனிக்குள் நாய் ஒன்று சிக்கியிருத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அந்த நாயை மீட்டு கரைக்கு கொண்டுவந்து அதற்கு சிகிச்சை அளித்து அதன் உயிரை காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்படும் உள்ளது. கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் குளத்தில் இறங்கி நாயை காப்பாற்றியதற்காக பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.
Input & Image courtesy:Examinerlive news