'இதைத்தான் எங்க இந்து மதத்துல கடமை'ன்னு சொல்லுவாங்க - சனாதன தர்மத்தை உயிராக கடைபிடிக்கும் ரிஷி சுனக்
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,;
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எப்படி பிரதமர் பதவிக்கு வந்தீர்கள் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
பிரிட்டன் நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் கடந்த ஆண்டு ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் இந்த பதவிக்குத் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறை. மேலும், பிரிட்டன் பிரதமர் பதவிக்கு வந்த முதல் இந்து இவர் அப்படின்ற சிறப்பு வேற!
இது மட்டுமில்லாமல் பிரிட்டன் நாட்டின் இளம் வயது பிரதமர் உள்ளிட்ட பல சிறப்பு வேற இவருக்கு இருக்குங்க! இவர் முதல்முறையாக எம்பியாக தேர்வான போதே, பகவத்கீதை மீதுதான் பதவிப் பிரமாணம் எடுத்துகிட்டார் அப்டின்றது ரொம்பவே ஆச்சர்யம் மட்டுமில்லங்க வரலாற்று கூட!
இப்போது பிரிட்டன் பொருளாதாரம் இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையில், அதைக் காக்க அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துட்டு வேற இருக்கார். அவர் பிரிட்டனின் பிரதமராகப் பதவியேற்று 100 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அங்குள்ள பிரபல செய்தி நிறுவனத்துக்கு ரிஷி சுனக் அளித்த பேட்டியில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இக்கட்டான நேரத்தில் பிரதமர் பதவியேற்றது குறித்த கேள்விக்கு அவர் இந்து மதத்தைக் குறிப்பிட்டுத் தெளிவாகப் பதிலளித்தார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இது தொடர்பாக ரிஷி சுனக் என்ன சொன்னாருன்னா 'என்னைப் பொறுத்தவரை இது கடமையைப் பற்றியது. இந்து மதத்தில் தர்மம் என்று ஒரு கருத்து உள்ளது.. அதை நாம் கடமை என்றும் கூடச் சொல்லலாம். சிறு வயது முதலே பெற்றோர் என்னை அப்படித்தான் வளர்த்தார்கள், நாம் என்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியான நேரத்தில் சரியான முறையில் செய்வதுதான் அது! இது உலகின் மிகக் கடுமையான வேலைகளில் ஒன்றாக இருக்கும் என்று தெரியும். இருந்தாலும் என்னால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதாலேயே இதற்கு ஒப்புக் கொண்டேன்.