பள்ளி பாடங்களை நடத்துவதற்கு ரோபோ: உருவாக்கிய இயற்பியல் பேராசிரியர்!
நான்காம் வகுப்பு வரை பள்ளிப் பாடங்களை நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட ரோபோ.
கொரோனா என்ற நோய் தாக்குதல் ஏற்பட்ட போது பல்வேறு மாணவர்கள் தங்களுடைய பள்ளிப்படிப்பை தொடர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக கிராமப்புறங்களில் இணையதள வசதி இல்லாமல் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் அவதிப்பட்டார்கள். எனவே கிராமப்புறம் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இயற்பியல் துறை பேராசிரியராக இருக்கும் அக்ஷய் என்பவர் புதிதாக ஒரு ரோபோ உருவாக்கி இருக்கிறார். அக்ஷய் இது பற்றி அவர் கூறுகையில், கர்நாடக மாநிலம் உத்தரகாண்ட் மாவட்டத்தில் தற்பொழுது தனியார் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார்.
இவர் தொடக்கப்பள்ளி அளவில் மாணவர்களுக்கு படிப்பை கற்றுக் கொடுப்பதற்காக சிக்க்ஷா என்ற மனித வடிவ ரோபோ ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இது மாணவர்களுக்கு பாடம் நடத்தும் திறன் கொண்டது என்று அவர் கூறியிருக்கிறார. குறிப்பாக படிப்பை பாதியில் முடக்கிய கிராமப்புற மாணவர்களின் கருத்தில் கொண்டு இவை உருவாக்க முடியாததாக அவர் கூறினார். கணினி செல்போன் போன்ற செயலியால் தத்ரூபமாக பாடம் நடத்தி விட முடியாது. ஆனால் பாடம் கற்பிப்பதை மாற்றும் நோக்கில் தான் சிக்க்ஷா என்ற மனித ரோபோ ஒன்றை உருவாக்கி இருக்கிறேன்.
அந்த ரோபோவினால் நான்காம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடும் நடத்தும் அளவுக்கு தற்பொழுது தயாராக இருக்கிறது. மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை தெளிவாக கொடுக்கும் திறன் கொண்டது. வாய்ப்பாடு, குழந்தைகளுக்கான பாடல் போன்ற பல்வேறு செயல்களை சுலபமாக கற்றுக் கொடுக்கும் என்று குறிப்பிட்டார். ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமான இவை செயல்பாட்டிற்கு வரவில்லை. அதற்காக முயற்சிகளை எடுத்து வருவதாக அவர் கூறினார்.
Input & Image courtesy: Maalaimalar