எதிர்காலத்தில் ஏற்படும் மிகப்பெரும் ஆபத்து ! விஞ்ஞானிகளின் முன்னெச்சரிக்கை !

உலகளவில் ஏற்படும் வெப்பமயமாதலைத் தடுக்க விட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்து என்று எச்சரித்துள்ள விஞ்ஞானிகள்.

Update: 2021-09-20 12:48 GMT

கடந்த சில வருடங்களாகவே காலநிலை மாற்றம் உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பசுமை இல்ல வாயு உமிழ்வு முதல் நகர்புறமயம் மற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கம், பிளாஸ்டிக் பயன்பாடு வரை என பல்வேறு காரணிகள் கால நிலை மாற்றத்துக்கான காரணமாக கூறப்படுகிறது. ஏற்கனவே அட்லாண்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகும் வேகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமாக உருகி வருவதாக ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். மேலும் அவற்றின் வேகம் முன்பை விட தற்பொழுது இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்று தகவல்களையும் வெளியிட்டு உள்ளார்கள். 


எனவே இந்த ஒரு தகவல் தான் தற்போது சமூக வலைதளங்களில் உலக அளவில் வேகமாக பரவி வருகிறது.  இதேநிலைமை தொடர்ந்தால் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்தை எதிர்கொள்வதை தவிர்க்க முடியாது என எச்சரிக்கின்றனர். இதுபற்றி அவர்கள் மேலும் கூறுகையில், "2060-ல் வடக்கு அட்லாண்டிக் பகுதிகளில் மிக மோசமான வானிலை தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும்" தெரிவித்துள்ளனர். இந்த காலநிலையில் அசாதாரண மாறுபாடுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது. கடும் வறட்சி, வெள்ளம், மோசமான வானிலை ஆகியவை உருவாக வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.


புவி வெப்பமயமாதலால் வடக்கு அட்லாண்டிக் பகுதியில் வடக்கு நோக்கிய இடப்பெயர்வை ஏற்படுத்தும். இத்தகைய இடப்பெயர்வு தெற்கு பகுதியில் குறைந்த மழைப்பொழிவை உருவாக்கும். கடந்த காலங்களில் வறட்சி மற்றும் வெப்பமான, வறண்ட வானிலையைக் கொண்டிருந்த வடக்குப் பகுதி ஈரப்பதத்தை பெறும் என கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற மாற்றங்களினால் ஏற்படும் தாக்கம் மிகப்பெரியது என்றும் கூறுகின்றனர். மக்களின் முடிந்து ஒத்துழைப்புடன் மட்டும்தான் இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் தான் புவி வெப்பமயமாதலை குறைக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறி உள்ளார்கள்.  

Input & Image courtesy:News 18

  


Tags:    

Similar News