இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி கொண்டுவர PFI சதி திட்டம்: NIA குற்றப்பத்திரிக்கை!

இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வருவதற்கான முயற்சிகளை PFI படைகளை அமைத்துத் திட்டமிட்டது.

Update: 2023-01-24 14:00 GMT

சமூகத்தில் பயங்கரவாதம் மற்றும் இந்தியாவில் வகுப்பு வாத வெறுப்பை ஆகியவற்றை உருவாக்கி 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நிறுவ வேண்டும் என்று ஒரு மிகப்பெரிய திட்டத்துடன் தங்களுடைய கொள்கையின் ஒரு பகுதியாக பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நடவடிக்கை இருந்தது என்று தேசிய புலனாய்வு அமைச்சகம் தற்பொழுது தன்னுடைய குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து இருக்கிறது. ஏற்கனவே மத்திய அரசினால் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டு இருக்கிறது. எதிரிகளை வீழ்த்த சேவை அணிகள் என்று ரகசிய குழுவுகளை தற்போது இவை உருவாக்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.


இந்த ரகசிய குழுக்கள் அல்லது கொலைகார படைகள் என தேசிய புலனாய்வு குழு இவற்றை விவரிக்கிறது. கர்நாடகாவில் தசீனா என்ற தாலுகாவில் கடந்த ஆண்டு 2022, ஜூலை 26 ஆம் தேதி தேசிய புலனாய்வுத்துறை அங்கு இருந்த பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவரை கைது செய்தனர். இதன் காரணமாக பாப்புலர் பிராண்ட் ஆப் அமைப்பு தடை செய்வதற்கு முக்கிய காரணமாக பா.ஜ.கவை சேர்ந்த யுவமோர்ச்சா மாவட்டக் குழு உறுப்பினர் பிரவீன் நெட்டாரு கொல்லப்பட்டார்.


இது தொடர்பான நீதிமன்ற வழக்கில் தான் தேசிய புலனாய்வு முகமைஇது தொடர்பான நீதிமன்ற வழக்கில் தான் தேசிய புலனாய்வு முகமை தன்னுடைய குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து இருக்கிறது. தடை செய்யப்பட்ட இந்த அமைப்பின் 20 உறுப்பினர்கள் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குறிப்பாக அவர்கள் சட்டத்திற்கு விரோதமாக பல்வேறு நடவடிக்கைகளை செய்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Thanthi

Tags:    

Similar News