SG சூர்யாவின் கைது நடவடிக்கை ஜனநாயக படுகொலையே.. குரல்வலையை நெறிக்கும் திராவிட மாடல்.. இந்து முன்னணி கண்டனம்!
நேற்று நள்ளிரவில் பா.ஜ.க மாநில தலைவர் SG சூர்யா அவர்களின் வீட்டில் இருந்து போலீசார் அவரை கைது செய்து இருக்கிறார்கள். குறிப்பாக இந்த கைது நடவடிக்கையின் பின்னணியில் கம்யூனிஸ்ட் கட்சி MP சு.வெங்கடேசன் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்ட குற்றத்திற்காக தற்போது SG சூர்யாவை கைது செய்து இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் சமூக வலைத்தளங்களில் அநீதிக்கு எதிராக கேட்ட அறிக்கையின் மூலமாக தற்போது அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
இது தொடர்பாக பல்வேறு பா.ஜ.க தொண்டர்கள் முதல் மேலிடம் வரை பலரும் தங்களுடைய கண்டன பதிவுகளை தொடர்ச்சியான வகையில் அரசுக்கு தெரியப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இந்து முன்னணி அமைப்பினரும் தன்னுடைய கண்டனத்தை அரசிற்கு பதிவு செய்து இருக்கிறார்கள். இது பற்றி அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் பொழுது, "ஊழலில் தமிழகத்தை மூழ்கடித்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு மத்திய அரசுக்கு எதிராக ஊர் தோறும் கருத்துரிமை பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் தமிழகத்தில் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் தமிழக அரசையும் கூட்டணி கட்சியினரையும் விமர்சித்தால் கைது நடவடிக்கையில் இறங்கி கருத்துரிமையின் குரல்வலையை நெரிக்கின்றனர், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நேற்று இரவு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா அவர்களை கைது செய்து இருப்பது ஜனநாயக படுகொலையே.. இந்நிலை தொடர்ந்தால் தமிழக மக்கள் திராவிட மாடல் அரசை தூக்கியெறிவது உறுதி என்று தங்களுடைய ஆதங்கத்தை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
Input & Image courtesy: News