சீக்கிய பெண் ஆசிரியரை கட்டாய மதமாற்றம் செய்து நிக்கா செய்து கொண்ட இஸ்லாமியர்!

இஸ்லாமியர்கள் சீக்கிய ஆசிரியையை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்து, நிக்காஹ் செய்ததைக் கண்டித்து சீக்கியர்கள் போராட்டம்.

Update: 2022-08-23 08:39 GMT

பாகிஸ்தானில் மனித உரிமைகளை மீறும் மற்றொரு சம்பவத்தில், ஆகஸ்ட் 20, 2022 சனிக்கிழமையன்று பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா (KPK) மாகாணத்தின் பீர் பாபாவில் சீக்கிய பெண் ஆசிரியை இஸ்லாமியர்களால் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டார். இந்த கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக KPK மாகாணத்தில் உள்ள சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை அன்று, போராட்டங்களின் வீடியோ ட்விட்டரில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சீக்கியர்கள் பாகிஸ்தானில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு வெளியே எதிர்ப்புத் தெரிவிப்பதையும் பல்வேறு கோஷங்களை எழுப்புவதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. 


சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண் ஆசிரியை ஒருவர் சனிக்கிழமை கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மறுநாள், அந்த இளம்பெண் ஒரு முஸ்லீம் நபரைத் திருமணம் செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சீக்கிய சமூகத்தினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.சீக்கிய ஆசிரியை தினா கவுர் சனிக்கிழமை கடத்தப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கட்டாய திருமணம் மற்றும் அதைத் தொடர்ந்து மதமாற்றம் இப் பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு வந்தனர், அங்கு யாரும் தங்கள் புகாரைப் பதிவு செய்யவில்லை.


குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, உள்ளூர் போலீசார் எந்த FIR பதிவு செய்யவில்லை மற்றும் சீக்கியர்களை இந்த பிரச்சினையில் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து பா.ஜ.க தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கவலை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அரசாங்கத்தை தனது ட்வீட்டில் டேக் செய்துள்ள சிர்சா இதுபற்றி கூறுகையில், "ஒரு குடும்பம் தனது மகள்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவதையும் உணர்ச்சி ரீதியாக சுரண்டப்படுவதையும் எப்படி அமைதியாகப் பார்க்க முடியும்? இது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது, நாங்கள் பாகிஸ்தானின் சீக்கிய சகோதரர்களுக்கு ஆதரவாக நிற்கிறோம். இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலையிட வேண்டும்" என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தினார்.

Input & Image courtesy:OpIndia News

Tags:    

Similar News