தமிழக அரசை கண்டித்து சீர்காழியில் சாலை மறியல்: நிவாரணம் வழங்க மக்கள் கோரிக்கை!

தமிழக அரசு கண்டித்து சீர்காழியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Update: 2022-11-24 06:07 GMT

கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்காததால் பொதுமக்கள் ஆவேசம் அடைந்திருக்கிறார்கள். குறிப்பாக தி.மு.க அரசை கண்டித்து சீர்காழியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பொழுது அங்கு வந்த தி.மு.க ஒன்றிய தலைவரும், அதற்கடுத்த வந்த தி.மு.க எம்.எல்.ஏவும் பொதுமக்கள் முற்றுகையிட்டு தமிழக அரசை நிவாரணத் தொகையை உயர்த்தி தரவேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு 70,000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்கதிர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கினர்.


குடியிருப்பு பகுதிகள் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நிலையில் பாதிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தமிழக அரசும் மக்களுக்கு தந்த ஆயிரம் ரூபாய் இன்னும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறி இருக்கிறார்கள். மழை ஓய்ந்து 11 நாட்கள் கடந்து விட்டது இப்பொழுது வரை 150 குடும்பங்களுக்கு எந்த விதமான நிவாரணம் வழங்கப்படவில்லை.


ஏனைய குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ரூபாய் ஆயிரமோ போதாது. கூடுதல் நிவாரண வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இரண்டு மணி நேரத்திற்கு போராட்டம் நடந்தது போலீசார் சமூக இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

Input & Image courtesy: Thanthi TV

Tags:    

Similar News