மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றுத் திறனாளியின் உலக கின்னஸ் சாதனை வீடியோ !
உலக கின்னஸ் சாதனையாளராக இடம்பெற்ற மாற்றுத்திறனாளி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
அமெரிக்காவில் ஓஹியோவைச் சேர்ந்த சியோன் கிளார்க் என்பவர்தான் இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் 4.78 செகண்டில் 20 மீட்டர் வரை தனது கைகளால் நடந்து சாதனை படைத்துள்ளார். இரு கால்களை இழந்த போதும் தன்னம்பிக்கையால் தனது உடலை வளர்த்துள்ளார். உடலின் கீழ் பாகம் இல்லாமல் மேல் பாகங்களை மட்டும் வைத்து சாதனை படைத்துள்ளார். இவருடைய இந்த உலக கின்னஸ் சாதனையை தனது முகநூல், யூடியூப், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மாற்றுத்திறனாளி ஒருவர் செய்த சாதனையை பதிவிட்டு உள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்கள் வைரலாகி வருகின்றது.இவர் தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்த பிறகு கூட உலக கின்னஸ் சாதனை நிகழ்த்திக் இருப்பது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இவர் ஒரு மல்யுத்த வீரர் மற்றும் சக்கர நாற்காலி பந்தய வீரரான சியோனின் குறிக்கோள், 2024ல் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் மற்றும் சக்கர நாற்காலி பந்தய விளையாட்டுகள் இரண்டிலும் பங்கேற்கும் முதல் அமெரிக்க தடகள வீரராக வேண்டும் என்பதே என அவரே தெரிவித்துள்ளார். இவருடைய இந்த குறிக்கோளுக்கு பலரும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்துள்ளார்கள்.
இவரது வீடியோ இதுவரை யூடியூபில் அதிக மக்களிடம் வாழ்த்துகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பலரும் இந்த வீடியோவின் கமெண்ட்ஸில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், மன ரீதியாக அவர் மிகவும் தைரிய சாலி எனவும் பதிவிட்டு வருகின்றனர். வாழ்க்கையில் தன்னிடம் அது இல்லை இது இல்லை என்று புலம்பும் மக்களிடையே தன்னிடம் இரண்டு கால்கள் இல்லை என்றால் கூட மாற்றம் என்பது மாறாதது அந்த மாற்றத்தை மாற்றுத்திறனாளியாக இவர் மாற்றியிருப்பது மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது.
Input & Image courtesy: Indian Express