கேரளாவில் கோபமடைந்த கோவில் யானையின் வைரல் வீடியோ !
கேரளாவின் திருவிழாவின்போது கோபமடைந்த கோவில் யானையின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள திருவில்வாமலை வில்வாத்ரிநாதர் கோவிலில் யானை ஒன்று தன் மீது அமர்ந்து இருந்த பாகனை தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. பெரும்பாலும் கேரளாவை திருவிழாக்களின்போது கோவில் யானைகளை பயன்படுத்துவது வழக்கம். கேரளா கோவில்களில் தினமும் நடக்கும் பூஜை வழிபாடுகளில் யானைகள் பங்கேற்கின்றன. அந்த வகையில் கடந்த வியாழன் அன்று வில்வாத்ரிநாதர் கோவிலில் நடந்த திருவிழாவின் போது யானையின் மீது ஏறி அதன் பாகன் அமர்ந்துள்ளார்.
திருவிழாவின் போது மேளம், தாளம் சத்தங்கள் கேட்கத் தொடங்கியவுடன் திடீரென கோபமடைந்து, யானை தன் உடலை அங்கும், இங்கும் அசைக்க ஆரம்பித்தது. இதில் பாகன் சுவாமிநாதன் கீழே விழுந்தார். பின்னர் யானை திரும்பி அவரைத் தாக்க முயன்றது. எனினும், பாகன் சுவாமிநாதன் பாதுகாப்பாக தப்பி ஓடிவிட்டார். கோவிலில் கச்சா சீவேலி சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. பின்னர் அங்கிருந்த தீபத்தையும் கீழே தள்ளிவிட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த முயற்சிகளுக்குப் பிறகு யானை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதைப்போல கடந்த ஆண்டும் யோகா குரு பாபா ராம்தேவ் யோகா செய்யும் போது யானை தனது உடலை அசைத்ததால், பாபா ராம்தேவ் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். மதுராவில் அமைந்துள்ள ராமனரதியில் அமைந்துள்ள குருசரணன் ஆசிரமத்திற்கு வந்த பாபா ராம்தேவ் அங்கிருந்த யானை மீது அமர்ந்து யோகா செய்தார். மாணவர்களுக்கு யோகா பயிற்சி தருவதாக அவர் யானை மீது ஏறி யோகா செய்தார். சிறிது நேரத்தில், யானை தனது உடலை அசைத்ததால், பாபா ராம்தேவ் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். எனவே கடந்த வருடம் அந்த வீடியோ வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy:Indian Express