மகாபாரத பாடலை பாடி அசத்தும் முஸ்லிம் பெரியவர்: வைரலாகும் வீடியோ !
முஸ்லிம் பெரியவர் மகாபாரத சீரியலில் வரும் டைட்டில் பாடலை பாடி அசத்தும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டாக்டர் சகாபுதீன் யாகூப் குரேஷி சமீபத்தில் ட்விட்டரில் ஷேர் செய்துள்ள வீடியோ ஒன்றுதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக இந்த வீடியோவில் ஒரு வயதான முஸ்லிம் பெரியவர் 1988 முதல் 1990 வரை தூர்தர்ஷன் TV சேனலில் ஒளிபரப்பான காவிய புராண சீரியலான மகாபாரதத்தின் டைட்டில் பாடலை மிகுந்த உற்சாகத்துடன் இந்த ஒரு பிழையும் இல்லாமல் பாடியுள்ளார்.
நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்ற இந்தியாவில் மட்டும்தான் 'வேற்றுமையில் ஒற்றுமை' காணும் பண்பு காணப்படுகிறது. 1980 காலங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் TV முன் அமர்ந்து ராமாயணம் மற்றும் மகாபாரத தொடர்களை பார்த்து ரசிப்பது மறக்க முடியாத அனுபவமாக பெரும்பாலான இந்தியர்களுக்கு இருந்துள்ளது. சுமார் 30 வருடங்களுக்கு முன் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரின் முழு டைட்டில் பாடலையும், முஸ்லிம் பெரியவர் ஒருவர் பாடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் இஸ்லாமிய பெரியவர் பாடுவதை சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் சிலர் தங்களது போனில் வீடியோ எடுப்பதையும் காணமுடிகிறது. பெரும்பாலான மக்கள் தங்களுடைய மதங்களின் கடவுள்களையும் மட்டும் உயர்வாக எண்ணி வாழ்ந்து வரும் இந்த காலகட்டத்தில் அனைத்து மதமும் ஒன்றுதான். கடவுள் என்பவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பதை புரிய வைக்கும் விதமாக இந்த வீடியோ வந்துள்ளது. இந்த வீடியோவை நெட்டிசன்கள் பாராட்டியும் உள்ளார்கள்.
Input & Image courtesy:India