திடீரென்று வானிலிருந்து விழுந்த பாம்பு: அலறியடித்து ஓடிய மக்கள் !
யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று கம்பியில் இருந்து விழுந்த பாம்பு, அலறியடித்து ஓடிய மக்கள்.
மிகவும் ஆபத்தான மற்றும் விஷமுள்ள பிராணிகளில் பாம்பும் ஒன்று. காடுகள், புதர்கள் நிறைந்த பகுதிகளில் நாம் எங்கு நடந்தாலும் ஆபத்தான விஷபாம்பு இருக்குமோ? என்ற பயம் நம் மனதில் எப்போதும் இருக்கும். ஆனால் தற்பொழுது நகர்ப்புறங்களில் அதிகமான பாம்புகள் தென்படுகின்றன. அதுவும் போஸ்ட் மர கம்பங்களில் அது ரெஸ்ட் எடுக்கும் இடமாக கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்பொழுது போஸ்ட் கம்பில் இருந்து திடீரென்று கீழே விழுந்த பாம்பினால் மக்கள் அலறியடித்து அங்குமிங்கும் ஓடினார்கள். அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு மாபெரும் பாம்பு ஒன்று வானத்திலிருந்து சாலையில் விழுகிறது.
அதை பார்த்த பொதுமக்கள் உயிரை காப்பாற்ற சாலையில் அலறியடித்து கொண்டு ஓட தொடங்கினார்கள். ஆனால் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த வீடியோவில் மிக நீளமான பாம்பு ஒன்று வானில் இருந்து விழுவது போல் இருக்கும். ஆனால் அந்த பாம்பு கம்பி ஒன்றில் நீண்ட நேரமாக அமர்ந்துள்ளது. மெதுவாக பாம்பு அதன் பிடியை தளர்த்தி தரையில் விழுகிறது. பாம்பு கம்பியில் இருப்பதை பார்த்து அங்கிருக்கும் மக்கள் ஆரவார கூச்சலிடுகின்றனர்.
பாம்பு சாலையில் விழுந்த உடனை பிடிக்க மீட்பு படையினரும் அங்கு தயார் நிலையில் இருந்தனர். நீண்டநேரம் மக்களில் செயலுக்கு பிறகு அந்தப் பாம்பு பிடிபட்டது. இந்த வீடியோவை பார்த்த பலர் அதனை ஷேர் செய்து கருத்துகள் தெரிவித்தும் வருகின்றனர். பாம்பு கம்பி மீது இருந்த வரை அந்த இடத்தில் தைரியமாக இருந்த பலர் விழுந்த உடன் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Input & Image courtesy:Zee news