இணையதளத்தில் வைரலாகி வரும் புதுவகை வெங்காய கேக் வீடியோ !

இணையதளத்தில் அதிக லைக்குகளைப் பெற்று வைரலாகி வரும் வெங்காய கேக் வீடியோ.

Update: 2021-11-29 13:34 GMT

உணவு பிரியர்களுக்கு என்றே தினம்தோறும் ஏராளாமான உணவு வகைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. பிரியாணி முதல் இனிப்பு வகைகள் வரை எண்ணில் அடங்காத வகைகள் இருக்கின்றன. அதே போன்று எல்லா வகையான உணவுகளையும் வீட்டிலே எளிமையாக செய்ய கூடிய வீடியோக்களும் உள்ளது. இதில் நம் கற்பனைக்கு எட்டாத வகையில் தயாரிக்கப்படும் சில வீடியோக்கள் எப்போதும் மில்லியன் கணக்கில் லைக்குகள் பெற்று விடும். நம் வீட்டில் இருக்கும் எந்த பொருளை வேண்டுமானாலும் சாப்பிட கூடிய வகையில் தயாரிக்கும் வீடியோக்கள் பெரிய அளவில் வைரலாகி விடும். 


இதே போன்று நடாலி சைட்செர்ஃப் என்கிற உணவு கலைஞர் எல்லாவித வீட்டு பொருட்களையும் கேக் வடிவத்தில் செய்து அசத்தி வருகிறார். இவை பார்ப்பதற்கு அசலான பொருள் போன்றே இருக்கும். ஆனால் இவற்றை வெட்டினால் தான் தெரியும் இவை கேக் என்பதே. அந்த அளவிற்கு கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியாதவாறு நடாலி தனது ஸ்பெஷல் கேக்குகளை செய்து வருகிறார். இவரின் கேக்குகள் 2020 ஆம் ஆண்டில் இருந்து வைரலாகி வருகிறது.சமீபத்தில் இவர் செய்த வெங்காய கேக் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த கேக் பார்ப்பதற்கு வெங்காயத்தை போன்று காட்சி தருகிறது. 


மேலும் இதில் அவர் செய்துள்ள வெங்காய தோலும் அசல் வெங்காயத்தை போலவே இருக்கிறது. முதன்முதலில் பார்ப்பவர்களுக்கு இது சாதாரண வெங்காயம் தான் என்று தோன்றும். ஆனால் இதை வெட்டி பார்த்தால் மட்டுமே கேக் என்று தெரிய வரும். இந்த வெங்காய கேக் இன்ஸ்டாகிராம் வீடியோவை சுமார் 4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 1.7 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.  

Input & Image courtesy: News 18

 




 




Tags:    

Similar News