பவுலிங் போடும் சிறுவனின் வீடியோ: பகிர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் !
சிறுவன் பவுலிங் போடும் வீடியோவை கிரிக்கெட்டில் ஜாம்பவான் ஆன சச்சின் டெண்டுல்கர் அவர்கள் பகிர்ந்துள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அந்த வீடியோவிற்கு ரியாக்ட் செய்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கும் தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார். அவர் மட்டுமின்றி, பல பிரபலங்களும் அந்த வீடியோவைப் பார்த்து வியந்து ரியாக்ட் செய்து, எமோஜிக்களை வழங்கி வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர் அவர்கள் பகிர்ந்த அந்த வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த வீடியோவை பற்றி அவர் கூறுகையில், "இந்த வீடியோவை என்னுடைய நண்பனிடமிருந்து பெற்றேன். இதைப் பார்த்தவுடன் நம்பவே முடியாத அளவுக்கு அற்புதமாக இருந்தது, வியப்பூட்டுகிறது. இந்தச்சிறுவனுக்கு விளையாட்டின் மீது இந்த சிறுவனின் காதலும், ஆர்வமும் வெளிப்படையாகத் தெரிகிறது" என்று தனது இன்ஸ்டாகிராம் போஸ்டின் கேப்ஷனில் தெரிவித்திருந்தார். சின்ன சின்ன வீடியோ கிளிப்புகளின் தொகுப்பாக ஒரு சிறுவன் பவுலிங் போடும் காட்சிகள் அந்த வீடியோவில் காணப்படுகிறது. இந்த வீடியோ தல பிரபலத்தையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வீடியோவில் ஒரு ஏழு அல்லது எட்டு வயதே உள்ள சிறுவன், பவுலிங் போடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அற்புதமான பந்து வீசும் அந்த சிறுவனின் பந்தை யாருமே எதிர்கொள்ள முடியவில்லை. ஒருவர் கூட ரன்கள் எடுக்கவில்லை. அதுமட்டுமின்றி, பலரின் விக்கெட்டுகளை சுலபமாக வீழ்த்தியும் இருக்கிறான். எனவே சிறுவயதிலேயே தகைய சிறுவர்களை ஒன்றாகப் பழகுவதன் மூலம் வருங்காலத்தில் இவர்கள் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக முடியும் என்று பலர் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
Input & Image courtesy:Hindustantimes