ஆனந்த் மகேந்திரா பகிர்ந்து கொண்டு புத்துணர்ச்சி வீடியோ: சமூக வலைதளங்களில் வைரல் !

பெரிய பயணங்களும் முதல் அடியிலே தொடங்கும் என்று ஆனந்த் மஹிந்திரா ஷேர் செய்த புத்துணர்ச்சி வீடியோ.

Update: 2021-11-11 13:37 GMT

எவ்வளவு பெரிய ஜாம்பவான்களுக்கும் சில நேரங்களில் அவர்கள் அடைய நினைக்கும் இலக்குகள் சாத்தியமற்றதாக தோன்றும். ஏனென்றால் மனிதர்களாகிய நாம் எந்நேரமும் உச்சகட்ட ஆற்றல் மற்றும் மனநிலையை பெற்றிருக்க முடியாது. இதற்கு தானும் விதிவிலக்கல்ல என்பதை மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திராவும் புத்துணர்ச்சி வீடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைத்தளங்கள் பக்கங்களில் பதிவு செய்து வெளிப்படுத்தி இருக்கிறார். தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில் ஊக்கமளிக்கும் மற்றும் சிந்தனையைத் தூண்டும் போஸ்ட்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்வதை தவறாமல் கடைபிடித்து வருகிறார்.


அந்த வகையில் தற்போது ஆனந்த் மஹிந்திரா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள வீடியோ சுமார் 2 வருடங்களுக்கு முந்தைய பழைய வீடியோ என்ற போதும், எப்போது அதை பார்த்தாலும் ஊக்கத்தையும், உத்வேகத்தையும் தர கூடிய கன்டென்ட் அதில் அடங்கி இருப்பது தான். ஒரு குறுநடை போடும் குழந்தை கடினமான சுவரில் ஏற முயற்சிக்கும் பழைய வீடியோ கிளிப் ஒன்றை தான் தற்போது ஆனந்த் மஹிந்திரா ஷேர் செய்து உள்ளார்.


அவர் ஷேர் செய்துள்ள வீடியோவில், ஒரு குழந்தை பாறை போன்ற கடினமான சுவரில் ஏறும் முயற்சியில் ஈடுபடுகிறது. அந்த சுவரில் ஆங்காங்கே கொடுக்கப்பட்டிருக்கும் சிறு சிறு பிடிகளை தனது பிஞ்சு கைகளால் பிடித்து கொண்டு சுவரில் ஏற முயற்சிக்கிறது. அந்த குழந்தை துவக்கத்தில் சுவரின் மேலே செல்ல முயற்சிக்கும் போது பல தடைகளை எதிர்கொள்கிறது மற்றும் தடுமாறுகிறது. ஆனாலும் சுவரின் மேலே ஏறும் தனது முயற்சியை மட்டும் கைவிடவே இல்லை. எப்படியும் தன்னால் சுவரின் மீது ஏறி மேலே சென்று விட முடியும் என்ற நம்பிக்கையில் சிறிதும் மனம் தளராமல் கரடுமுரடான பிடிகளில் தனது கை மற்றும் கால்களை பயன்படுத்தி தொடர்ந்து சுவரின் மீதேறி முன்னேறி கொண்டே செல்கிறது. குழந்தையின் கடின முயற்சி இறுதியில் வெற்றி பெறுகிறது. ஒருபோதும் முயற்சியை கைவிட கூடாது என்று செயல்படும் அந்த குழந்தையின் செயல் மூலம் அதன் போராட்ட குணம் வெளிப்படுகிறது.  

Input & Image courtesy:Twitter post

 


Tags:    

Similar News