தொழில்நுட்பத்தினால் சாத்தியமான அற்புதங்கள்: விண்வெளியில் திருமணங்கள் சாத்தியமா?
தொழில் நுட்பத்தால் சாத்தியமாகும் விண்வெளியில் திருமணங்கள்
மனிதனின் இந்த அறிவியல் தொழில்நுட்பத்தால் இன்றைய நவீன உலகம் பல்வேறு விதமான முன்னேற்றங்களைக் அடைந்துள்ளது என்றே சொல்லலாம். ஏனென்றால், ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஏதேனும் ஒரு அற்புதங்களை இந்த தொழில்நுட்பம் நமக்கு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், சிலருக்குத் தங்களுடைய திருமணங்களை விண்வெளியில் நடத்தும் ஆசை இருக்கிறது அவற்றை நிறைவேற்றும் விதமாக 2024 ஆம் ஆண்டில் இது சாத்தியமாகும் என்று புளோரிடாவை தளமாகக் கொண்ட 'ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 100,000 அடி உயரத்தில் மிதக்கும் ஒரு கால்பந்து மைதான அளவிலான விண்வெளி பலூன் மூலம் ஏந்தி செல்லப்படும் ஒரு காப்ஸ்யூலுக்குள் தம்பதிகள் திருமணம் செய்து கொள்ளமுடியும் என்று அந்த நிறுவனம் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாது வேறு ஏதேனும் நிகழ்வுகளை நடத்த விரும்புவோர்களுக்காக ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் நிறுவனம் தற்போது தனது காப்ஸ்யூல்களில் விமானங்களை $125,000 டாலர்களுக்கு விற்பனை செய்கிறது. அதாவது இன்றைய இந்திய மதிப்பில் ஒருவருக்குச் சுமார் 93 லட்சம்.
நிறுவனத்தின் பிரம்மாண்டமான விண்வெளி பலூன்களால் எடுத்துச் செல்லப்படும் காப்ஸ்யூல்களில் எட்டு நபர்கள் வரைச் செல்லலாம். இது பூமியின் மேற்பரப்பிலிருந்து 100,000 அடி உயரமுள்ள அடுக்கு மண்டலத்திற்குள் செல்லும் இந்த பயணம் 6 மணி நேரம் வரை நீடிக்கும். காப்ஸ்யூலுக்குள் இருக்கும் போது பயணிகள் பூமியின் 360 டிகிரி காட்சிகளைப் பார்க்க முடியும். கடந்த ஜூன் மாதத்தில், நிறுவனத்தின் சோதனை வாகனம் ஆன நெப்டியூன் ஒன், நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தை ஒட்டிய ஸ்பேஸ் கோஸ்ட் ஸ்பேஸ்போர்ட் மையத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. 2024 ஆம் ஆண்டிற்கான அனைத்து டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அந்த நிறுவனம் தற்போது கூறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Inputs: https://www.cnn.com/travel/article/spaceship-neptune-balloon-flights-scn/index.html
Image courtesy: CNN news