தூத்துக்குடியில் திறன் மேம்பாட்டு மையம் துவக்கம்: ஸ்டெர்லைட் காப்பர் புதிய முயற்சி!
தூத்துக்குடியில் இளைஞர்கள் திறன் மேம்பாட்டு மையத்தை ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் துவங்கியுள்ளது.
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் முத்துச்சரம் முன்னெடுப்பின் முதன்மைத் திட்டங்களில் ஒன்றான தாமிர முத்துக்கள், தூத்துக்குடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் பல்வேறு படிப்புகளில் திறன் பயிற்சிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது, லாஜிஸ்டிக்( Logistics) வர்த்தகத்தை முதன்மையாக கொண்டு புதிய திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 மாதங்களில் இரு பிரிவுகளாக 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைய இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் ஏற்கனவே தொடங்கப்பட்ட திறன் மேம்பாட்டு மையத்தில், தையல் இயந்திரம் ஆபரேட்டர், வெல்டிங், மின்சாரம், தளவாடங்கள் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகிய 5 தொழில்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த 5 வர்த்தகங்களும், தேசிய திறன் மேம்பாட்டு அறிக்கையின் மூலம் கவனம் செலுத்த வேண்டிய தொழில்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தியாவின் லாஜிஸ்டிக்ஸ் துறையில் நேரடியாக 22 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பணிபுரிகின்றனர். இது எதிர்காலத்தில் அதிக வேலைகளை உருவாக்கும்.
இதேபோல், தூத்துக்குடி இளைஞர்களுக்கு நன்மை அளிக்க கூடிய வகையில், திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கும் நோக்கத்துடன், ஸ்டெர்லைட் காப்பர் ஒரு புதிய திறன் மேம்பாட்டு மையத்தை தொடங்கியுள்ளது. வேதாந்தா அறக்கட்டளை உதவியின் கீழ் இயங்கும் இந்த மையம், அனைவரும் கல்வி மற்றும் திறன் மேம்பாடு பயிற்சி பெறக்கூடிய வகையில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், மக்கள் சுயசார்புடையவர்களாக மாற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் . இதுவரை, நாடு முழுவதும் உள்ள 180 வேதாந்தா ரோஜ்கார் மையங்கள் மூலமாக 12 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 2021-22 ஆம் ஆண்டில் 101 புதிய மையங்களைத் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Sterlitecopper