பொங்கலுக்கு சூரியன், பசுவை வழிபடுவது முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு சங்கடமாக இருக்கிறது - ஷாநவாஸ் சர்ச்சை பேச்சு!

பொங்கலுக்கு சூரியன், பசுவை வழிபடுவது முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு சங்கடமாக இருக்கிறது - ஷாநவாஸ் சர்ச்சை பேச்சு!;

Update: 2021-01-13 10:26 GMT

தி.மு.க கூட்டணியில் இருக்கும் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ் "பொங்கலின் போது இந்து வழிபாடுகள் மற்றும் சடங்குகள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் ஒற்றுமை மற்றும் மத உணர்வுகளை புண்படுத்துவதால் சூரியன், மாடு உள்ளிட்டவற்றை வணங்குவதை நிறுத்தி அனைத்து சடங்குகள் மற்றும் வழிபாடுகளை கைவிட வேண்டும்" என்று பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய இந்து மக்கள் அவர்களுடைய சமய நம்பிக்கைகளில் இருந்து இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதாகவும், சூரியனுக்கு படையல் வைப்பது, சூரியனை வணங்குவது, மாடுகளை வணங்குவது என்று சடங்குக்குரிய வழிபாட்டுக்குரிய வழிமுறைகளுக்குள் பொங்கல் பண்டிகையை கொண்டு சென்றதன் விளைவாக கடவுள் இல்லை என்று கூறும் கடவுள் மறுப்பாளர்கள், ஓர் இறைவனை தவிர வேறு யாரையும் வணங்க கூடாது என்று நினைக்கும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இவர்களுக்கெல்லாம் சிக்கல்கள் வருகின்றன என்று பேசியுள்ளார்.

தமிழர் திருநாள், இயற்கையை போற்றும் திருநாள், விவசாயிகளை மதிக்கும் திருநாள் என்பதோடு நின்று இருந்தால் பிரச்சனை இல்லை, சிக்கல் இல்லை என்று கூறும் அவர், பொங்கல் பண்டிகையில் ஒரு குறிப்பிட்ட மதத்தை தூக்கி பிடிப்பது போல் சடங்குகளும் வழிபாடுகளும் இருக்கும் போது சிக்கல்கள் வருகின்றது என்று கூறியது இந்துக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே தமிழர் ஒற்றுமைக்கு, தமிழர் கொண்டாட்டத்திற்கு எந்த இடையூறும் விளைவிக்காத வகையில் எந்த வழிபாடும் எந்த சடங்குகளும் இதில் வந்து விடக்கூடாது என்றும் பொங்கல் பண்டிகையை தமிழர் திருநாள் என்று மட்டுமே அடையாளப்படுத்த வேண்டும் என்றும் அவர் பேசியது தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கும் மிஷனரி கைக்கூலிகளுக்கு ஒத்து ஊதும் விதமாக உள்ளதை பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.

இந்துக்கள் தங்கள் பண்டிகைகளைக் கொண்டாடவே கூடாது என்பது போல் பொங்கல் பண்டிகையில் "எந்த வணக்கத்திற்கும் இடமில்லை; எந்த வழிபாட்டிற்கும் இடமில்லை; எந்தச் சடங்குக்கும் இடம் இல்லை" என்றும் இஸ்லாமியரான ஷாநவாஸ் இந்துக்கள் எவ்வாறு பண்டிகை கொண்டாட வேண்டும் என்று அறிவுரை கூறுவது போல் பேசியது பல தரப்புகளில் இருந்தும் விமர்சனத்தை ஈர்த்துள்ளது.

Similar News