ஆற்றில் குவியும் பிளாஸ்டிக் பொருட்கள்: சுத்தம் செய்யும் அன்னப்பறவை!
ஆற்றில் குவியும் பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்யும் அன்னப்பறவை.
சமீபத்தில் மனிதர்கள் செய்யவேண்டிய நிறைய விஷயங்களை விலங்குகள் செய்த சமூக வலைதளங்கள் மிகவும் வைரலாகி, மனிதர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது இந்திய வனத்துறை அதிகாரி அவர்கள் தற்போது பகிர்ந்துள்ள ஒரு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு அன்னப்பறவை அதனுடைய வழியில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தன்னுடைய கால்களினால் சுத்தம் செய்யும் வீடியோ தான் அது.
மனிதர்கள் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களினால் சுற்றுச்சூழல் மிகவும் மாசடைகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்கள் மக்காத தன்மை உடையவை. எனவே அதன் மூலம் நிலத்தில் உள்ள நீர்த்தன்மை பூமியின் அடியே செல்ல விழாதவாறு தடுக்கிறது. மேலும் அவை மக்குவதற்கு பல நூற்றாண்டுகள் ஆகும் என்ற காரணத்தினால் அவை மண்ணிற்கும் நல்லது அல்ல. அப்படி பயன்படுத்தும் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் விடுவதால், கடல் நீர் ஆவியாவது தடுக்கப்படுவதோடு மேலும் மழை பொழிவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் பொய்த்துப் போகிறது. இதன் காரணமாக பிளாஸ்டிக் பூமிக்கு நல்லது அல்ல என்று பல்வேறு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
அந்த வகையில் தற்போது வனத்துறை அதிகாரி ஒருவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், ஒரு அன்னப் பறவை ஒன்று தன் வழியில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தன்னுடைய கால்கள் மூலம் அப்புறப் படுத்தி தனக்கான பாதையை உருவாக்கிக் கொள்கின்றது. எனவே மனிதர்கள் தன் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் அவற்றை பயன்படுத்திய பிறகு அப்புறப்படுத்தும் வழிமுறைகளை அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று சமூகவலைத் தளங்களில் இதன்மூலம பல்வேறு நெட்டிசன்கள் சார்பில் கேட்கப்பட்டுள்ளது.
Input & Image courtesy: News 18