கச்சத்தீவை மீட்கும் முயற்சியில் பிரதமர் எடுக்கும் முடிவுகள்!
கச்சத்தீவை மீட்கும் முயற்சியில் பிரதமர் மோடி அவர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள்.
பல்வேறு காலங்களில் தேர்தல் சமயத்தில் மட்டும் பேசப்படும் முக்கியமான விஷயங்களில் ஒன்றாக கச்சத்தீவு மீட்பு இருந்து வருகிறது. தமிழக மீனவர்கள் பெரும்பாலோரின் கோரிக்கைகளில் இதுவும் ஒன்றாகத் தான் நீண்ட காலமாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது தேர்தல் நேரங்களில் மட்டும் பேசப்படும் கச்சத் தீவை மீட்பதற்கான உண்மையான முயற்சியை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கு முதல் முயற்சியையும் தற்போதைய பா.ஜ.க எடுத்துள்ளது.
இதற்கு அச்சாரமாக நகர்த்தலில் மோடி அவர்கள் அரசு ஈடுபட்டுள்ளது. நம் நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ளது கச்சத் தீவு. இந்தியாவைச் சேர்ந்த இந்தத் தீவை, பிரிட்டிஷ் ஆட்சியின்போது, இரு நாடுகளும் கூட்டாக நிர்வகித்து வந்தன. இந்தியாவில் மற்றும் இலங்கையும் கூட்டாகத்தான் இந்த தீவை ஆட்சி செய்து வந்தனர். கடந்த 1974 மற்றும் 1976ல் காங்கிரஸ் ஆட்சியின் போது செய்யப்பட்ட ஒப்பந்தங்களின்படி, 285 ஏக்கர் பரப்பளவு உள்ள கச்சத் தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.
தற்போது அங்கு மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. அதே நேரத்தில், அங்குள்ள அந்தோணியார் தேவாலயத்தில் நடக்கும் ஆண்டு திருவிழாவுக்கு மட்டும், தமிழகத்தில் இருந்து மீனவர்கள் செல்ல அனுமதிக்கப் படுகின்றனர். அந்த பகுதியில் தற்போது மத்திய அரசின் சார்பில் இலங்கை இந்திய தூதர் அவர்கள் இது குறித்து அங்கு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் வகையில் இந்தியா இத்தகைய செயல்களை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Dinamalar News