தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதை இரு மாநில பிரச்சனையாக்க வேண்டாம் - ஆந்திர போலீஸ் பேட்டி!

தமிழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை இரு மாநிலப் பிரச்சினையாக பெரிது படுத்த வேண்டாம் என்று ஆந்திர போலீசார் பேட்டி.

Update: 2022-10-25 05:03 GMT

தமிழக மாணவர்கள் மீது சுங்க சாவடி ஊழியர்கள் தாக்குதடா அதிக சம்பவத்தை இரு மாநில மொழி பிரச்சனையாக பெரிது படுத்த வேண்டாம் என்று ஆந்திர போலீசார் அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். ஆந்திராவில் திருப்பதியில் உள்ள சட்டக் கல்லூரியில் படிக்கும் தமிழக மாணவர்கள் சிலர் வாகனங்கள் மூலமாக சென்று நேற்று முன்தினம் தேர்வு எழுதினார்கள், பின்னர் அங்கிருந்து புத்தூர் வடமலை பேட்டை சுங்க சாவடி வழியாக சென்னை திரும்பி கொண்டு இருந்தனர்.


அப்பொழுது சுங்கு சாவடி கட்டணம் செலுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு முதலில் தமிழக மாணவர்கள் மீது, சுங்க சாவடி ஊழியர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதன் காயம் அடைந்த சில மாணவர்கள் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆந்திர போலீசார் முன்னிலையில் இந்த தாக்குதல் நடந்ததாகவும் தெரிகிறது. இது தொடர்பாக திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வரி ரெட்டி பரமேஸ்வர ரெட்டி செய்தியாளர்களிடம் பேசிய போது, சுங்க சாவடி ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இதனால் பல வாகனங்கள் நீண்டு வரிசையில் காத்திருந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்து வாகன ஓட்டிகள் சிலரை மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். சுங்கு சாவடி ஊழியர்கள் தாக்குதல் நடத்தவில்லை. இது குறித்து வழக்கப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். மேலும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகளிடம் பேசி இருக்கிறோம். ஆனால் அதற்குள் இரு மாநிலங்களுக்கிடையாக பிரச்சினையாக என சமூக வலைதளங்களில் இந்த செய்தி பரவி வருகிறது. இந்த சம்பவம் இரு மாநிலப் பிரச்சினையாக பெரிது படுத்த வேண்டாம். ஆந்திராவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே சமூக உறவு நீடிக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News