மோடியை எதிர்த்தால் கருத்து சுதந்திரம், ஆதரித்தால் சர்ச்சையா? - அர்ஜுன் சம்பத் ஆவேசம்
தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் மக்கள் நலத்திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழக திரைப்பட துறையை சார்ந்த பலரும், மோடியின் கொள்கைகளையும், திட்டங்களையும், வரவேற்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இசை ஞானி இளையராஜா அவர்கள், அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார். திமுக சார்பு ஊடகங்களும், விசிக வினரும், கம்யூனிஸ்ட்டுகளும், திராவிடர் கழகங்களும், இளையராஜா மீது வன்மம் காட்டி அவதூறு செய்து வருகின்றனர்.
இதே போல தருமை ஆதினகர்த்தர் குறித்தும், அவமரியாதை செய்யும் வகையில் கருத்துக்கள் வெளியிடப் படுகின்றன. தொடர்ந்து பிரதமர் மோடி அவர்களை பாராட்டி கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் பாக்யராஜ், திமுக நாடாளுமன்ற உறுப்பினர், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் அவர்களையும் இழித்தும் பழித்தும் தனிப்பட்ட முறையில் அவதூறு செய்தும், மிரட்டியும், நிர்பந்தகளை ஏற்படுத்தியும், அவமதித்தும் வருகிறார்கள்.
மத்திய மாநில அரசுகளுக்கிடைய உள்ள நல்லுறவை கெடுப்பது இவர்களின் உள் நோக்கம். பிரதமர் மோடியை ஆதரித்தால் சர்ச்சை கருத்து என்றும், மோடியே எதிர்த்தால் கருத்து சுதந்திரம் என்றும் செயல்படுவது திமுக அரசின் அணுகுமுறையாக இருக்கிறது. இந்த அணுகுமுறை மாற வேண்டும்.
தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் உள்நோக்கத்தோடு செயல்படும் இந்த தீய சக்திகளுடன் திமுக அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரதமரை, மத்திய அரசாங்கத்தை தேவையில்லாமல் எதிர்த்து தமிழகத்தில் பிரிவினைவாதத்தை தூண்டி விடும் சக்திகளுக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Inputs From: அர்ஜூன் சம்பத் அறிக்கை